Home /News /entertainment /

ஏகப்பட்ட கேலி, கிண்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுத்த அதிரடி முடிவு

ஏகப்பட்ட கேலி, கிண்டல்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா எடுத்த அதிரடி முடிவு

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனிமேல் கடைக்கு போக மாட்டேன் என்கிறார் மீனா,

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்கு போய் வேலையை பார்த்த மீனாவை ஒட்டுமொத்த குடும்பமும் சேர்ந்து கலாய்கின்றனர். வீட்டில் மட்டுமில்லை கடையில் வேலை செய்பவர்களும் மீனாவை கேலி, கிண்டல் செய்கின்றனர். வேலையை முடித்து, முடியாமல் நடந்து வரும் மீனா, வீட்டுக்கு வந்து குண்டை தூக்கி போடுகிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இப்போது மூர்த்திக்கு  உடம்பு சரியில்லாத காரணத்தில் அவர் வீட்டில் ஓய்வு எடுக்கிறார். கதிரும் வீட்டை விட்டு சென்றதால் கடையில் ஆள் இல்லை. இதனால் தனம் கடையை பார்த்துக் கொள்கிறார். வீட்டில் இருந்து கொண்டு மீனாவும் ஐஸ்வர்யாவும் வீட்டு வேலை, சமையல் செய்வது, குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றனர். ஆனால்  எல்லா விஷயத்திற்கு மீனாவுக்கும்  ஐஸ்வர்யாவுக்கும் சண்டை வருகிறது. இருவரும் அடித்துக் கொள்ளாத குறை தான். மற்றப்படி சண்டை போடுவது அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கும் தெரிந்து விடுகிறது.



    தாய்லாந்து வரை சென்று விருது பெற்ற பிக் பாஸ் நமீதா மாரிமுத்து.. குவியும் பாராட்டுக்கள்!

    இதனால் மூர்த்தியும் டென்ஷன் ஆகிறார். இதை சரிசெய்ய இனிமேல் நான் கடைக்கு போகிறேன் தனம் அண்ணி வீட்டில் இருக்கட்டும் என்கிறார் மீனா. ஆரம்பத்தில் எல்லோரும் சிரிக்கின்றனர். ஆனால் மீனா விடாபிடியாக நின்று சாதிக்கிறார். கடைக்கு கிளம்பி செல்கிறார். ஆனால் அங்கு அவரால் கடையை பார்த்துக் கொள்ள முடியவில்லை.கஷ்டப்படுகிறார். இதற்கு வீடே தேவலாம் என நினைக்கிறார். இன்றைய எபிசோடில் கடைக்கு ஐஸ்வர்யா சாப்பாடு கொண்டு வருகிறார்.



    குழந்தை பிறந்து 1 வருடம் கூட ஆகவில்லை.. வில்லி வெண்பாவை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்!

    அந்த நேரம் கடையில் நிறைய கூட்டம் இருக்க, ஐஸ்வர்யா மீனாவுக்கு உதவி செய்கிறார். ஆனால் அதுவும் மீனாவுக்கு பிடிக்கவில்லை கடையிலே இருவரும் சண்டை போடுகின்றனர். ஜீவா வந்து சண்டையை நிறுத்துகிறார். கடைசியில் வீட்டுக்கு போகும் மீனா நடக்க முடியாமல் நடந்து செல்கிறார். கடையில் பயங்கர வேலை என தனத்திடம் சொல்கிறார். கடைசியில் ஒருநாள் கடைக்கு போயிட்டு வந்ததே போதும்.  இனிமேல் என்னால் கடைக்கு போக முடியாது என ஷாக் கொடுக்கிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி