Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் சண்டை.. மீனா - ஐஸ்வர்யாவால் கலங்கி நிற்கும் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் மீண்டும் சண்டை.. மீனா - ஐஸ்வர்யாவால் கலங்கி நிற்கும் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வழக்கம் போல் மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போடுகின்றனர். இந்த சண்டைக்கு காரணம் ரூ. 5000 பணம்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கு மீண்டும் சண்டை வெடிக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள் மீனா - ஐஸ்வர்யா சண்டைக்கு முடிவே இல்லை. காரணமே இல்லாத விஷயத்தை எல்லாம்  பெருசாக்கி மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போடுகின்றனர். இதற்கு முடிவு கட்ட தனம் அண்ணி எவ்வளவோ முயற்சிகளை எடுத்து விட்டார். ஆனால் எல்லாமே வேஸ்ட்.  சண்டை போடாமல் இருக்க  மீனாவும் கடைக்கு போறேன் என்றார். ஒருநாள் போய் பார்த்துவிட்டு ஓடி வந்து விட்டார். மீண்டும் தனம் அண்ணி கடைக்கு கிளம்பி விட்டார். திரும்பவும் வழக்கம் போல் மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போடுகின்றனர். இந்த சண்டைக்கு காரணம் ரூ. 5000 பணம்.

    குக் வித் கோமாளி கனியை தேடி போகும் பிரம்மாண்ட வாய்ப்பு?

    கண்ணனுக்கு வேலை கிடைக்க முன்பணம் கட்ட வேண்டும் என்று ஐஸ்வர்யா, தனத்திடம் பணம் கேட்டு இருந்தார். இன்றைய எபிசோடில் அதை மறுபடியும் ஞாபகப்படுத்துகிறார். தனமும் பணத்தை இன்றே  கொடுக்கிறேன் என்கிறார். உடனே மீனா, பணத்தை கண்ணனிடம் தனியாக கொடுத்து அனுப்ப வேண்டாம் ஜீவாவும் போகட்டும் என்கிறார். இது ஐஸ்வர்யாவுக்கு பிடிக்கவில்லை. மீனா சொல்வதில் நியாயம் இருக்கிறது என்கிறார் மூர்த்தி. அதனால் கண்ணனும் சரி என்கிறார்.

    பிக் பாஸ் பிரபலத்தை கரம் பிடிக்கும் விஜய் டிவி சீரியல் நடிகை!

    தனம் கடைக்கு கிளம்பிய பின்பு இதை வைத்து ஐஸ்வர்யா கண்ணனிடம் சண்டை போடுகிறார். இதை பார்க்கும் மீனா, ஜீவா வந்தா என்ன தப்பு? என கேட்கிறார். இதனால் பிரச்சனை பெருசாகிறது. கண்ணனுக்கு பொறுப்பு இல்லை என்கிறார் மீனா. கண்ணனுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார் ஐஸ்வர்யா. இருவரும் மாறி மாறி பேச, கடைசியில் மீனா ஐஸ்வர்யாவை கண்டப்படி திட்டி விட்டு கயல் பாப்பாவை தூக்கி கொண்டு அவரின் அம்மா வீட்டுக்கு செல்கிறார். கண்ணனால் இருவரையும் சமாளிக்க முடியவில்லை. கூட்டு குடும்பமாக இருந்த மூர்த்தி வீட்டில் இப்போது தினம் தினம் கச்சேரி தான்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி