சீரியலில் தான் அப்படி... படத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவுக்கு மோசமான ரோல்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

கல்லூரி ஆசிரியராக நடிக்கும் கெளரவை ஏமாற்றும் கல்லூரி பெண்ணாக நடித்தவர் மீனா தான்

 • Share this:
  பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் மீனா படு சீரியஸ் வில்லியாக நடித்த படத்தை பார்த்து இருக்கீங்களா?

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை ஹேமா ராஜ்குமாருக்கு சின்னத்திரையில் பயங்கரமான ஃபேன்ஸ். சீரியலில் கூட இவரின் ரோல் எல்லோரும் ரசிக்கும் வகையில் இருக்கும். மீனா கதாபாத்திரத்தில் வேறு யாரு நடித்தாலும் இவர மாதிரி வராது என்பது தான் ஃபேன்ஸ்களின் கருத்து. இதற்கு முன்பு பல சீரியல்களில் ரியாலிட்டி ஷோக்களில் தோன்றினாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் இவருக்கு ஏகப்பட்ட ஃபேன்ஸ்கள் வந்தனர். மீனா மீது வைத்திருந்த நம்பிக்கையில் அந்த சீரியலின் இயக்குனர் அவரின் கர்ப்பகாலத்தில் கூட அவரை நடிக்க வைத்தார். குழந்தை பிறந்த பிறகு 3 மதங்கள் அவரை சீரியலில் காட்டாமலே கதையை தொடர்ந்தாரே தவிர அவரின் கதாபாத்திரத்தில் வேரு ஒருவரை நடிக்க வைக்கவில்லை.

  திருமணமான மீனா தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பிஸி. தனியாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். அதில் பெண்களுக்கு தேவையான ஏகப்பட்ட டிப்ஸ்கள், குழந்தை பராமரிப்பு பற்றியும் கூறி வருகிறார். இன்ஸ்டாவில் அவ்வப்போது லைவில் தனது ஃபேன்களுடன் உரையாடுவார். மீனாவுக்கு ஏகப்பட்ட திறமைகளும் உண்டு. அவரின் மொத்த குடும்பமும் அவருக்கு பக்கபலமாக இருக்கின்றனர். டஸ்கி ஸ்கீன் என்பதால் பல இடங்களில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது என்று ஹேமா ஒருசில இடங்களில் பதிவு செய்துள்ளார். சீரியலில் எப்போதுமே புடவையில் ஃபேமலி ரோலில் நடிக்கும் ஹேமா நடிப்பு என்று வந்துவிட்டால் கலக்கி விடுவார்.

  அப்படி அவர் நெகட்டிவ் ரோலில் நடித்த இந்த படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்து இருந்தாலும் இந்த விஷயத்தை கவனித்து இருக்கீங்களா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அருள்நிதி நடிப்பில் வெளியான ஆறாவது சினம். மிகச் சிறந்த சைக்கோ த்ரில்லர் என்று பெயர் வாங்கிய படம். பெண்ணால் ஏமாற்றப்படும் ஒருவர், சைக்கோவாக மாறி அந்த பெண்ணின் கணவரை கொன்று பழியைத் தீர்த்து கொள்வான். இது தான் ஆறாவது சினம் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி,. இந்த படத்தில் மீனா நடித்திருப்பார். ஆமாம், கல்லூரியில் படிக்கும் 5 பெண்களில் இவரும் ஒருவர். கல்லூரி ஆசிரியராக நடிக்கும் கெளரவை ஏமாற்றும் கல்லூரி பெண்ணாக நடித்தவர் ஹேமா ராஜ்குமார் தான்.   
  Instagram இல் இந்த இடுகையை காட்டு

   

  Hema Rajkumar இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@hemarajsathish_official)


  இதுவரை கவனிக்காதவர்கள் இனிமேல் படத்தை பார்த்தால் கவனித்து பாருங்கள் அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா இருப்பார். உண்மையில் வெள்ளித்திரையில் தான் ஹேமாவின் பயணம் தொடங்கியது. ஆனால் அவரை வரவேற்று வெற்றியை தந்தது சின்னத்திரை தான்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: