• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சென்னைக்கு போய் கூட இப்படியா? தலையில் அடித்து கொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

சென்னைக்கு போய் கூட இப்படியா? தலையில் அடித்து கொள்ளும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் கடைசி வரை மீனாவின் எந்த ஆசையும் நடக்கவில்லை.

  • Share this:
    சென்னைக்கு தனியாக போக ஆசைப்பட்ட மீனாவின் எண்ணம் பகல் கனவு ஆக, போதாத குறைக்கு இங்கு வந்தும் மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் பாச ராகம் பாடுவது கடுப்பை தருகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனா இதுவரை ஆசைப்பட்ட எதுவுமே நடந்ததில்லை. வீட்டில் அதிகமாக சண்டை போடுவதும் மீனா தான், அதே நேரம் பிரச்சனை என்று வந்த உடன் முதல் ஆளாக நிற்பதும் மீனா தான். ஆனாலும் பாண்டியஸ் ஸ்டோர்ஸ் தம்பிகளின் பாச ராகம் மீனாவுக்கு அவ்வப்போது கடுப்பை ஏற்படுத்துவது சகஜமான ஒன்று தான். சொல்லப்போனால் இந்த சீரியலை மீனாவுக்காகவே பார்க்க தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. மீனாவின் அப்பாவுக்கு மகள் மீது பயங்கர பாசம், மீனாவும் மாப்பிள்ளையும் வெளியே தனியாக 2 நாட்கள் நிம்மதியாக இருக்கட்டும் அப்படின்னு பிளான் பண்ணி சென்னைக்கு போறதுக்கு வழி செய்தார்.

    ஆனால் மொத்த குடும்பமும் மீனாவுடனே கிளம்பி விட்டனர். போதாத குறைக்கு ஜீவா வேற, அண்ணன் அண்ணியை விட்டு எங்கையும் வர மாட்டாரு. கடைசியில் ஃபேமலி டூர் போல் மொத்த குடும்பமும் கிளம்பி விட்டனர். சென்னைக்கு வந்த உடனே, தமிழும் சரஸ்வதியும் சீரியலில் வரும் கோதை அம்மா குடும்பத்தை சந்திக்கின்றனர். இங்கு தான் மெகா சங்கமம் தொடங்குகிறது. ஒரு ஆபத்தில் இருந்து தமிழை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி காப்பாற்ற, கோதை அம்மா அவர்களுக்கு நன்றி சொல்லி, மொத்த குடும்பத்தையும் அவரின் வீட்டிலே தங்க வைக்கிறார். இந்த 1 வாரத்திற்கு மெகா சங்கமம் தொடரும் என தெரிகிறது.

    கடைசி வரை மீனாவின் எந்த ஆசையும் நடக்கவில்லை. கயலுக்கு நட்சத்திர பிறந்த நாளை கொண்டாட இன்னும் ஏற்பாடும் செய்யவில்லை. இப்போது மொத்த குடும்பமும் கோதை அம்மா வீட்டில் தான் தங்கி இருக்கிறார்கள். இதற்கிடையில் மூர்த்திக்கு உடம்பு சரியில்லாமல் போகிறது. உடனே கதிரும், ஜீவாவும் அவருக்கு கால் அமுக்கி, கை அமுக்கி பணிவிடை செய்ய, மீனாவுக்கு கோபம் தலைக்கு ஏறுகிறது.

    குன்னக்குடியில் தான் இதே சீன் என்றால் சென்னைக்கு வந்தும் உங்க அக்கபோர் தாங்க முடியல, இதுக்கு சென்னைக்கு வந்து இருக்கவே வேண்டாம் என்று தலையில் அடித்துக் கொள்கிறார். பாவம்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: