Home /News /entertainment /

ஆஸ்பிட்டலில் இருக்கும் மூர்த்திக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த மீனா அப்பா!

ஆஸ்பிட்டலில் இருக்கும் மூர்த்திக்கு அடுத்த அதிர்ச்சி கொடுத்த மீனா அப்பா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை இப்போது வீட்டை விட்டு சென்று விட்டனர்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியலில் ஆஸ்பிட்டலில் இருக்கும் மூர்த்திக்கு அடுத்த அதிர்ச்சி கொடுக்கிறார் மீனாவின் அப்பா. இதை கேட்டு ஜீவாவும் தனமும் செய்வதறியாமல் திகைக்கின்றனர். 

    பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டில் குடும்பம் இப்படி இரண்டாக பிரிய காரணமே மீனாவின் அப்பா ஜனார்த்தன் தான். ரூ. 50 ஆயிரம் பணத்திற்கு இவர் செய்த பிரச்சனையால் வீட்டில் சண்டை வெடிக்க குடும்பம் இரண்டானது. இதனால் கதிர் - முல்லை இப்போது வீட்டை விட்டு சென்று விட்டனர். அதுமட்டுமில்லை இந்த துக்கம் தாங்க முடியாமல் மூர்த்திக்கு நெஞ்சு வலி வர அவரோ ஆஸ்பிட்டலில் இருக்கிறார். மூர்த்திக்கு ஆப்ரேஷன் செய்ய 2 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் சொன்னதும் அந்த பணத்தை ஓடி போய் முதல் ஆளாக கட்டியது மீனாவின் அப்பா தான். இந்த அதிர்ச்சியே ஜீவாவால் தாங்க முடியவில்லை.

    எங்களின் மிகப் பெரிய தொடக்கம்... ஹேப்பி நியூஸ் சொன்ன ஹுசைன் - மணிமேகலை ஜோடி!

    அப்போதே ஜீவா, இது கடன் தான் இந்த பணத்திற்கு அசல், வட்டி இரண்டையும் தந்து விடுவோம் என்றார். மீனாவின் அப்பா சரி என்றார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கண் விழிக்கும் மூர்த்தி ஜீவா, கண்ணன், தனத்திடம் பேசுகிறார். அப்போது மூர்த்தியை பார்க்க உள்ளே வரும் மீனா அப்பா உடல்நலம் குறித்து விசாரிக்கிறார். பின்பு வீட்டில் நடந்த சண்டை பற்றி இனி பேச வேண்டாம் அதை மறந்து விடலாம் என்கிறார். அப்போது தான் தனம், மீனாவின் அப்பா 2 லட்சம் கொடுத்ததை பற்றி சொல்கிறார்.

    அவளுக்கு 2 வயசு தான் ஆகுது பாவம்... மகளுக்காக அழுத விஜய் டிவி ஆல்யா மானசா!

    உடனே மூர்த்திக்கு கோபம் வர, பணத்தை வாங்கிய ஜீவாவை திட்டுகிறார். ஆனால் மீனா அப்பா இது நம்ம குடும்பம் தானே என ஒரே வார்த்தையில் ஷாக் கொடுக்கிறார். அதே போல் 2 லட்சம் பணம் கடன் இல்லை, எனக்கு அசலும் வேண்டாம் வட்டியும் வேண்டாம் என்கிறார். இதை மூர்த்தியால் நமப முடியவில்லை. ரூ. 50,000 பணத்திற்கு வீட்டில் அவ்வளவு பெரிய சண்டை போட்டவர், 2 லட்சத்தை வேண்டாம் என்கிறாரே? என ஆச்சரியம் .

    ஜீவாவும் தனது மாமானர் பற்றி புரிந்துக் கொள்ள முடியாமல் தவிக்கிறார். அதற்குள் வீட்டில் இருக்கும் மீனா, ஐஸ்வர்யாவுக்கு மூர்த்தி கண் விழித்த விஷயம் தகவலாக போகிறது. இந்த பக்கம் முல்லை கயல், பாண்டியனை நினைத்து கஷ்டப்படுகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி