முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / ஒரு நைட்டிக்கு இவ்வளவு டிராமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் அலப்பறைகள்!

ஒரு நைட்டிக்கு இவ்வளவு டிராமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவின் அலப்பறைகள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

நைட்டியை வைத்து பழைய மசாலாவை அரைத்தே சீரியல் எபிசோடை ஓட்டி விடுகிறார் இயக்குனர் என்கின்றனர் ரசிகர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒரு நைட்டி பிரச்சனையை வைத்தே கடந்த 2 வாரமாக எபிசோடை ஓட்டிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் போன வாரத்தில் இருந்து நைட்டி பிரச்சனை மிகப் பெரிய பிரச்சனையாக மூர்த்தி வீட்டில் சென்று கொண்டிருக்கிறது. கடைசி மருமகள் ஐஸ்வர்யா, நைட்டி போட்டது தான் இவ்வளவு அக்கபோருக்கும் காரணம். குட்டி அண்ணி மீனா, நைட்டி போட, இனிமேல் இதுப்போன்ற ஆடைகளை அணிய வேண்டாம் என தனம் அட்வைஸ் செய்தார். அதே தனம் அண்ணி, இப்போது ஐஸ்வர்யா நைட்டி போட்டதுக்கு திட்டவில்லை என்பது தான் மீனாவின் கோபத்துக்கு காரணம்.

இதையும் படிங்க.. 90ஸ் கிட்ஸுக்கு ஒரு சீக்ரெட்! - டாப் 10 சுரேஷ் பகிர்வு

ஐஸ்வர்யா - கண்ணன் வீட்டுக்கு வந்த நாள் முதல் மீனாவுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் விடாமல் சண்டை அரங்கேறி வருகிறது. முல்லைக்கும் ஐஸ்வர்யாவை பிடிக்கவில்லை. இதனால் தினம் தினம் புது பிரச்சனை வீட்டில் வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் போன வாரம் தொடங்கிய நைட்டி பிரச்சனை இன்னும் முடிந்த பாடில்லை. ஐஸ்வர்யாவுடன் போட்டி போட, மீனா தனது அம்மாவிடம் சொல்லி நைட்டி வாங்குகிறார். ”ஐஸ்வர்யாவா? நானா? இன்னிக்கு ஒரு கை பார்த்து விடுகிறேன்” என்ற டயலாக் வேற . இந்த காட்சிகள் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் புரமோவாக மாறி விட்டது.

இதையும் படிங்க.. பிக் பாஸிலிருந்து வெளியே வந்த உடனே சஞ்சீவ் யாரை சந்தித்தார் தெரியுமா?

' isDesktop="true" id="657751" youtubeid="8L9z-z6IhQo" category="television">

இந்த புரமோவை பார்த்த பின்பு, நைட்டியை வைத்து பழைய மசாலாவை அரைத்தே சீரியல் எபிசோடை ஓட்டி விடுகிறார் இயக்குனர் என்கின்றனர் ரசிகர்கள். நைட்டி போடுவதற்கு ஒட்டு மொத்த குடும்பமும் ஓவர் ரியாக்‌ஷன் தருவது, அதை வைத்து 2 நாட்களுக்கு மாறி மாறி பேசுவது என பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அலப்பறைகள் எல்லை மீறுகிறது என்கிறனர் நெட்டிசன்கள். ஆனால் இதையும் பார்க்க ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv