ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவுக்காக மீனா எடுக்க போகும் அதிரடி முடிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸில் அப்பாவுக்காக மீனா எடுக்க போகும் அதிரடி முடிவு!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இனிமேல் மீனா தான் அவரின் அப்பா கடையை பார்த்துக் கொள்ள போகிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து அரங்கேற போகும் ட்விஸ்ட் குறித்த தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ஏற்கெனவே கதிர் - முல்லை வீட்டை விட்டு சென்று விட்ட நிலையில் அடுத்தது மீனா ஒரு அதிரடி முடிவை எடுக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா - மீனா தான் வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கடைசி நேர திருப்பமாக கதிர் - முல்லை வீட்டை விட்டு சென்று விட்டனர். மூர்த்தி தனம் எவ்வளவு சொல்லியும் கதிர் முடிவை மாற்றிக் கொள்வதாக இல்லை. இதனால் மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து  ஆஸ்பிட்டலில் படுத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கூட தனம், கதிரிடம் வீட்டுக்கு வரும்படி கெஞ்சுகிறார். ஆனால் தன்மானம் மிக்க கதிர் இனிமேல் வர மாட்டேன் என்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் அவர்கள் மீது கோபத்தில் இருக்கின்றனர்.

  வள்ளி திருமண வரவேற்பு கொண்டாட்டம்.. திண்டுக்கல்லில் கலர்ஸ் தமிழின் உற்சாகப் பயணம்!

  தனம், இருவரிடமும் பேச மறுக்கிறார். ஆனாலும் கதிர் - முல்லை ஆஸ்பிட்டலில் இருக்கின்றனர். இன்றைய எபிசோடில் கண் விழிக்கும் மூர்த்தி கதிர் பற்றி கேட்கிறார். அப்போது தனம் நடந்ததை பற்றி சொல்ல அவரால் அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இந்த விஷயத்தை பற்றி கஸ்தூரி அத்தாச்சியும் மீனா - ஐஸ்வர்யாவிடம் சொல்கிறார். இருவருக்கும் அதிர்ச்சி தாங்க முடியவில்லை. இந்நிலையில் மூர்த்தி ஆஸ்பிட்டலில் இருக்கும் காரணத்தினால் ஜீவாவும் கண்ணனும் தான் கடையை பார்த்துக் கொள்ளும் நிலை வந்துள்ளது.

  நீண்ட வருடம் கழித்து சன் டிவி சீரியலில் நடிக்க வரும் ரஜினி பட நடிகர்!

  ஆனால் மீனா அப்பா, ஜீவாவை விடுவதாக இல்லை.ஏனென்றால் இப்போது அவரின் சூப்பர் மார்க்கெட்டை ஜீவா தான் பார்த்துக் கொள்கிறார். இதை வைத்து ஒரு பிரச்சனை வெடிக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இதுக் குறித்த அப்டேட் இப்போது வெளியாகியுள்ளது. அதாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்ட  இனிமேல் மீனா தான் அவரின் அப்பா கடையை பார்த்துக் கொள்ள போகிறார் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஏற்கனவே ஐஸ்வர்யா ,பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையை பார்த்துக் கொள்வது போல் அவருக்கு போட்டியாக மீனா தனது அப்பா கடையை பார்த்துக் கொள்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது உண்மையா? இல்லையா? என்பது அடுத்த வார புரமோவில் தெரிந்து விடும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  Published by:Sreeja
  First published:

  Tags: Pandian Stores, TV Serial, Vijay tv