Home /News /entertainment /

மீனா அப்பா செய்த வில்லத்தனம்.. அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

மீனா அப்பா செய்த வில்லத்தனம்.. அதிர்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மொத்த குடும்பமும் வீட்டை விற்க ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு செல்கின்றனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைசி நேரத்தில் தனது நிஜ முகத்தை காட்டி ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி கொடுக்கிறார் மீனாவின் அப்பா ஜனார்த்தன். 

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது மூர்த்தியின் பூர்வீக வீட்டை விற்கும் எபிசோடுகள் டெலிகாஸ்ட் ஆகி வருகின்றன. மூர்த்தி கனவில் இறந்த லட்சுமி அம்மா வீட்டை மாற்றுங்கள் எல்லாமே நல்லதா நடக்கும் என்கிறார். அந்த நேரம் பார்த்து ஜீவாவின் தலையில் ஓடு விழ வருகிறது. இதை எல்லாம் மனதில் கொண்டு வீட்டை விற்று வேற வீட்டை வாங்கி கொண்டு செல்லலாம் என பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் முடிவு எடுக்கின்றனர். ஏற்கெனவே கதிர் வீட்டை விட்டு சென்று விட்டதால் புது வீட்டுக்கு போனால் அவரும் வந்து சேர்ந்து விடுவார் என மூர்த்தி நினைக்கிறார்.

    மீண்டும் சீரியலுக்கு வரும் நடிகர் விஜய்யின் தோஸ்த் சஞ்சீவ்!

    வீட்டை விற்க பல இடங்களில் முயற்சி செய்கின்றனர்.ஆனால் யாரும் மூர்த்தி குடும்பத்தினரை வீட்டு விற்ற பிறகு அதே வீட்டில் 6 மாதம் தங்க ஒத்துக் கொள்ளவில்லை. இந்த நேரம் பார்த்து மீனாவின் அப்பா, நானே வீட்டை வாங்கி கொள்கிறேன் என்கிறார். இதற்கு ஆரம்பத்தில் மூர்த்தி சம்மதம் சொல்லவில்லை. கடைசியில் மீனா ஏதோ ஏதோ  பேசி மொத்த குடும்பத்தின் எண்ணத்தையும்  மாற்றிவிடுகிறார். கடைசியில் மூர்த்தியும் தனமும் ஜனார்த்தனுக்கு ஓகே சொல்லி விடுகின்றனர்.

    பிரபல சீரியல் நடிகருக்கு ஒரே நேரத்தில் நடந்த சோகம்! ரசிகர்களும் ரொம்ப மிஸ் பண்ணுவாங்க!

    இந்த விஷயத்தை ஜீவா, கதிர் மற்றும் முல்லையிடம் சொல்லுகிறார். அவர்களும் சரி என்கின்றனர். ஆனால் முல்லையின் அம்மாவும் அக்கா மல்லியும் மூர்த்தியிடம் சண்டை போடுகின்றனர். இந்த வீட்டை ஜனார்த்தனுக்கு விற்க கூடாது என சொல்கின்றனர். வாக்கு கொடுத்து விட்டோம் என்கிறார் தனம். இந்நிலையில் இன்றைய எபிசோடில் மொத்த குடும்பமும் வீட்டை விற்க ரிஜிஸ்டர் ஆபீஸுக்கு செல்கின்றனர்.



    அப்போது கடைசி நேர ட்விஸ்டாக ஜனார்த்தன் போட்ட திட்டம் அனைவருக்கும் தெரிய வருகிறது. மூர்த்தியின் பூர்வீக வீட்டை மீனா பெயருக்கு வாங்குகிறார் அவரின் அப்பா ஜனார்த்தன். இதை கேட்டு மூர்த்தியும் தனமும் ஷாக் ஆகுகின்றனர். ஜீவாவும் மீனாவும் இதை எதிர்பார்க்கவில்லை. எல்லோரும் ஷாக்கில் நிற்கின்றனர். இவ்வளவு நாள் இதை மீனாவின் பெயரில் தான் வாங்குகிறேன் என ஜனார்த்தன் சொல்லவில்லை. அடுத்து என்ன நடக்கும்? என்பது நாளைய எபிசோடில் தெரிய வரும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி