பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்டாக தனது அப்பாவையே எதிர்த்து பேசுகிறார் மீனா.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் - முல்லை பிரிந்து போனதற்கு மிக முக்கியமான காரணம் மீனாவின் அப்பா ஜனார்த்தன் . 45 ஆயிரம் பணத்திற்காக வந்த பிரச்சனை பெரிதாக வெடித்து கடைசியில் கதிரும் முல்லையும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார்கள். அந்த அதிர்ச்சியில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வர ஆஸ்பிட்டலில் அட்மிட் ஆனார். அப்போது ஆப்ரேஷனுக்கு ரூ. 2லட்சம் பணத்தை கொடுத்து உதவுகிறார் மீனாவின் அப்பா. அந்த நேரத்தில் அவர் செய்த உதவியை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மறக்கவில்லை. ஆனால் கடனை உடனே கொடுத்து விட வேண்டும் என்று நினைத்தனர்.
சீரியலில் தான் மாமியார் - மருமகள்.. நிஜத்தில் பார்வதியும் தேவயானியும் வேற மாதிரி!
தனம் அண்ணி தனது நகையை வைத்து பணத்தை கொடுத்து விடுகிறார். நேற்றைய எபிசோடில் ஜீவாவும் தனமும் ஜனார்த்தன் வீட்டுக்கு சென்று மொத்த பணத்தையும் செட்டில் செய்து விட்டு திரும்ப வருகிறார்கள் . இன்றைய எபிசோடில் மீனாவின் அப்பா ஃபோன் செய்து தனது மகளிடம் புலம்புகிறார். வழக்கமாக அப்பாவுக்கு சப்போர்ட்டாக பேசும் மீனா, இந்த முறை ஜீவா, தனத்திற்கு சப்போர்ட்டாக பேசி அதிர்ச்சி தருகிறார். இதை ஜனார்த்தன் எதிர்பார்க்கவில்லை. தனது மகள் மாறிவிட்டதாக நினைக்கிறார்.
வீட்டுக்கு வரும் ஜீவாவும் தனமும் நடந்ததை பற்றி சொல்கிறார்கள். ஆனால் அப்போது தனது அப்பாவை விட்டு கொடுக்காமல் பேசுகிறார். நகையை வைத்து பணத்தை தந்து இருக்க கூடாது எனவும் சொல்கிறார். பின்பு கதிர் - முல்லை வீட்டுக்கு சென்ற விஷயத்தை தனம் சொல்கிறார். மொத்த குடும்பத்திற்கும் ஷாக்.
சொன்னதை செய்த பிரபல இசையமைப்பாளர்.. சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு கொடுத்த வாய்ப்பு!
குறிப்பாக மூர்த்தி இதை எதிர்பார்க்கவில்லை. கதிர், புது வீட்டில் மூர்த்தி - தனம் ஃபோட்டோவை வைத்து சாமி போல் வணங்கும் விஷயத்தையும் கூறுகிறார். மூர்த்திக்கு முகம் மாறுகிறது. ஆனால் கடைசி வரை கதிரை பார்க்க முடியவில்லை என்பதையும் வருத்ததுடன் தனம் சொல்கிறார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.