Home /News /entertainment /

கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. சம்பள ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டாங்கப்பா!

கார் வாங்கிய விஜய் டிவி பிரபலம்.. சம்பள ரகசியத்தை மட்டும் சொல்ல மாட்டாங்கப்பா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

லாக்டவுன் முடிந்த பின்பு மறுபடியும் சீரியலுக்கு கிளம்பி சென்றவர், ஒருபக்கம் நடிப்பு மறுபுறம் யூடியூப் சேனல் என பிஸியாகி விட்டார்.

    விஜய் டிவி பிரபலங்கள் பலரும் தொடர்ந்து கார் வாங்கி வரும் நிலையில் அந்த லிஸ்டில் இப்போது இணைந்து இருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா.

    பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடருக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.அண்ணன் - தம்பி பாசம், தினமும் வீட்டில் நடக்கும் நிகழ்வுகள், கூட்டு குடும்பம் என கதை நகர்வதால் பலருக்கும் பிடித்தமான சீரியலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இருந்து வருகிறது. விஜய் டி தொடர்களிலே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்து வெற்றி கண்டுள்ளது.இந்த தொடர்களில் நடிக்கும் ஒவ்வொருவருமே தனித்தனியாக தனக்கென தனி ஃபேன்ஸ் ஃபாலோவை வைத்திருக்கிறார்கள். குறிப்பாக மீனா ரோலில் நடிக்கும் ஹேமா.

    பிக் பாஸ் வருண் – அக்‌ஷராவுக்கு திருமணமா? ஷாக்கான ரசிகர்கள்!

    மீனாவுக்காவே இந்த சீரியலை பார்க்கும் ரசிகர்கள் கூட்டமும் உண்டு. இந்த சீரியலில் பாத்ரூமை வைத்தே மீனா 360 எபிசோடுகளை ஓட்டிருப்பார். அந்த அளவுக்கு மீனாவின் பாத்ரூம் சண்டை தீராத ஒன்று. ஆரம்பத்தில் இருந்தே இந்த சீரியலில் மீனா ரோலில் ஹேமா தான் நடித்து வருகிறார். சீரியலில் அவர் மாசமாக இருப்பது போல் காட்டப்பட்ட எபிசோடுகளில் அவர் நிஜமாகவே கற்பமாக இருந்தார். அந்த நேரத்திலும் தனது ரோலை கச்சிதமாக நடித்துக்கொடுத்தார். பின்பு 3 மாதம் ஓய்வு எடுத்தார். அப்போது கூட சீரியலில் அவரின் கதாபாத்திரத்துக்கு வேறு ஒருவரை இயக்குனர் காட்டவில்லை. இதை அவரின் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கோரிக்கையாகவே வைத்திருந்தனர். அதன் பின்பு கொரோனா லாக்டவுன் காலகட்டத்தை சந்திக்க நேரிட்டது. அந்த நேரத்தில் தான் ஹேமா ’ஹேமாஸ் டைரி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கினார்.

    லாக்டவுன் முடிந்த பின்பு மறுபடியும் சீரியலுக்கு கிளம்பி சென்றவர், ஒருபக்கம் நடிப்பு மறுபுறம் யூடியூப் சேனல் என பிஸியாகி விட்டார். அவரின் யூடியூப் சேனல் 3 லட்சத்திற்கு மேற்பட்ட சந்தாதாரர்களை கடந்து வெற்றிக்கரமாக சென்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் அம்மாவாக தனது பணியை தொடர்கிறார். அதே போல் தவறாமல் தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதன் மூல நல்ல வருமானமும் அவருக்கு கிடைத்து வருகிறது. இந்நிலையில், ஹேமா தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.



    இதற்கு முன்பு அவர் வைத்திருந்தது, செகண்ட் அண்ட் கார், இப்போது புத்தம் புதிய காரை ஹேமா தனது கணவருடன் சேர்ந்து வாங்கியுள்ளார். இவர் வீட்டில் இருந்து கிளம்பி கார் ஷோரூமூக்கு சென்று கார் வாங்கியது வரை வீடியோவாக எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மீனாவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

    இதையும் படிங்க.. பாக்கியலட்சுமி கோபி இப்படி கூட நடிப்பாரா? ஷாக்கான ரசிகர்கள்!

    அப்படியே விஜய் டிவி பிரபலங்களின் சம்பள ரகசியத்தை பற்றியும் கேட்டு வருகிறார்கள். காரணம், கடந்த 3 மாதமாக அடுத்தடுத்து தொடர்ந்து விஜய் டிவி பிரபலங்கள் பெரிய கார்களை வாங்கி வருகிறார்கள். தாடி பாலாஜி, சரண்யா, ஜாக்குலின், கேப்ரில்லா, நாஞ்சில் விஜயன் இப்போது இவர்கள் லிஸ்டில் மீனாவும் சேர்ந்து விட்டார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி