Home /News /entertainment /

மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. இனி அந்த ரோலில் நடிக்க போவது இவர் தான்!

மறைந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்.. இனி அந்த ரோலில் நடிக்க போவது இவர் தான்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீண்டும் குமரேசன் மாமா ரோலுக்கான சீன்கள் இடம்பெறுகின்றன.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமரேசன் மாமா ரோலில் இனி நடிகர் தேனி முருகன் நடிக்கவுள்ளார். இவர் கனா காணும் காலங்கள் சீரியலில் பச்சையின் அப்பா ரோலில் நடித்து புகழடைந்தார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சின்னத்திரை சீரியலாக உள்ளது. கூட்டு குடும்பத்தின் வாழ்வியலை சொல்லும் இந்த மெகா சீரியல் 4 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிப்பரப்பாகி தொடர்ந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. இந்த சீரியலில் நடித்த நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரும் அறிந்தது. அவர் நடித்து வந்த முல்லை ரோல் பயங்கர ரீச் அதன் பின்பு அந்த ரோலில் நடிகை காவ்யா நடித்து வருகிறார். அதே போல் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குமரேசன் மாமா ரோலில் நடிகர் நெல்லை சிவா நடித்து வந்தார்.

    நம்ம வீட்டு பொண்ணு சீரியலில் இருந்து விலகிய நடிகை! இதுதான் காரணமா?

    நெல்லை சிவா வெள்ளித்திரையில் மிகவும் பிரபலம். குறிப்பாக வடிவேலு படங்களில் அதிகம் இடம்பெற்று இருப்பார். வடிவேலுவின் கிணற்றை காணவில்லை  காமெடியில் போலீஸ் ரோலில் வயிறு குலங்க சிரிக்க வைத்தவர் நெல்லை சிவா. இவர் கடந்த 2021 ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு பின்பு குமரேசன் மாமா ரோலை சீரியலில் காட்டவில்லை. அதற்கு பதில் வேற எந்த நடிகரும் அந்த ரோலில் நடிக்கவும் இல்லை.

    அந்த விஷயம் தான் காரணமா? ‘அபி டெய்லர்’ சீரியலில் முக்கிய மாற்றம்!

    இந்நிலையில் தற்போது மீண்டும் குமரேசன் மாமா ரோல் சீரியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. அதற்கு காரணம், மூர்த்தி நெஞ்சு வலி காரணமாக வீட்டில் ஓய்வு எடுக்கிறார். அவரின் வேலையை இப்போது தனம் அண்ணி   கவனிக்கிறார். கடைக்கு போகும் தனம் அண்ணி எல்லா வேலையும் செய்கிறார். அதனால் கடையில் இருக்கும் சரவணன், குமரேசன் மாமா ரோல்கள் தொடர்ந்து சில நாட்களுக்கு காட்டப்படவுள்ளன.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    அதனால் மீண்டும் சீரியலில் குமரேசன் மாமா ரோலுக்கான சீன்கள் இடம்பெறுகின்றன. நெல்லை சிவா இடத்தில்  தற்போது தேனி முருகன், குமரேசன் மாமா ரோலில் நடிக்கிறார். இவரின் அறிமுகம் நேற்றே சீரியலில் டெலிகாஸ்ட் ஆகியது. தேனி முருகன் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் பச்சையின் அப்பாவாக நடித்து நடிப்பில் அசர வைத்தவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி