• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனிக்குடித்தனம் செல்கிறாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டைக்கு மேல் சண்டை!

தனிக்குடித்தனம் செல்கிறாரா மீனா? பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் சண்டைக்கு மேல் சண்டை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் மீனா பேசியதை முல்லையிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குட்டி அண்ணி மீனாவால் குடும்பத்தில் சண்டை வெடிக்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்த நபர்களும் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் உள்ளனர். வீட்டின் குட்டி அண்ணியான மீனாவுக்கு சந்தோஷம் ஒருபக்கம் என்றாலும் பொறாமை குணம் மேலோங்கி விட்டது. மொத்த குடும்பமும் தனத்தின் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவா, கதிர், மூர்த்தி எல்லோரும் எப்போதுமே தனத்தின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதாக இருப்பதால் அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறார் மீனா. அதன் தொடர்ச்சியாக இன்று வீட்டில் மீனாவால் சண்டை வெடிக்கிறது.இந்த முறை மீனாவின் அப்பாவும் சேர்ந்து கொண்டு தனம் மற்றும் அவரின் அம்மாவுடன் சண்டைக்கு செல்வதால் பிரச்சனை பெரிதாகி வெடிக்கிறது.

    நேற்றைய எபிசோடின் தொடர்ச்சியாக, ரோட்டில் வண்டியை தள்ளிக்கொண்டு வரும் மீனாவை அவரின் அப்பா பார்த்து விடுகிறார். வழக்கம் போல் மீனாவை திட்டிவிட்டு அவரை காரில் அழைத்து கொண்டு வீட்டுக்கு செல்கிறார். அந்த நேரம் தான் தனம் ரூமூக்கு செல்ல, கயல் பாப்பா உடனே எழுந்து அழ தொடங்கி விட்டாள். அந்த நேரம் பார்த்து பக்கத்தில் யாரும் இல்லாததால் மீனா குழந்தையை யாரும் பொறுப்பாக பார்த்துக் கொள்ளவில்லை என கத்துகிறார். மீனாவின் அப்பாவும் வார்த்தையை விட சண்டை வருகிறது. மீனா, தனத்தை பார்த்து புது குழந்தை வந்ததால் கயலை கவனிக்கவில்லை என பட படவென பேசி விடுகிறார். தனத்தின் அம்மாவும் கூட கூட பேச இருவரும் மல்லுக்கட்டி நிற்கின்றனர். சண்டையை உடனே நிறுத்த,தனம்  அவரின் அம்மாவை திட்டி உள்ளே அனுப்புகிறார். மீனாவின் அப்பாவிடம் மன்னிப்பும் கேட்கிறார்.

    இந்த பக்கம் மீனாவின் அப்பா வழக்கம் போல் மீனாவை தனியாக வரும்படி சொல்லிக் கொடுக்கிறார். இந்த சின்ன வீட்டில் பிள்ளையை வைத்து கஷ்டப்பட வேண்டாம் என்றும் தனியாக வருவது குறித்து ஜீவாவிடம் பேசும்படி சொல்லிவிட்டு செல்கிறார். அதற்குள் வீட்டுக்கு வரும் முல்லையிடம் தனம் அம்மா எல்லா விஷயத்தையும் சொல்லி அழுகிறார். தனத்தை பற்றி புரிந்து கொள்ளாமல் மீனா பேசியதை முல்லையிடம் சொல்லி வருத்தப்படுகிறார். உடனே முல்லை மீனாவிடம் வீட்டில் என்ன நடந்து என்பதை விளக்கி இனிமே தனத்தை தப்பாக பேச வேண்டாம் எனவும் கூறுகிறார். ஆனாலும் மீனாவுக்கு தனியாக செல்வது குறித்து எண்ணம் வந்து விட்டது.

    ரூல் பிரேக்கர் அண்ணாச்சி.. திடீர் வில்லன் வருண்! கன்டென்ட்டுக்கு இப்படி இறங்கிட்டாங்களே?

    குழந்தைகளை வைத்து வீட்டில் சண்டைக்கு மேல் சண்டை வெடிக்கிறது. இந்த நேரத்தில் தான் தனம் குழந்தையை தொட்டிலில் போடும் நாளை விஷேசமாக கொண்டாடலாம் என வீட்டில் பேச்சு எடுக்கின்றனர். அக்கம் பக்கத்தினரை அழைத்து விருந்து சாப்பாடு போடலாம் என்கின்றனர். லட்சுமி அம்மா மறைவுக்கு பிறகு வீட்டில் நடக்கும் நல்ல காரியம் என்பதால் அனைவரும் சந்தோஷமாக இருக்கின்றனர். கண்டிப்பாக இந்த விஷேசத்திலும் பிரச்சனை வெடிக்க போவது உறுதி.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: