• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் அழ வைத்துவிட்டார்.. ஆனா நிஜத்தில் லட்சுமி அம்மா பண்ண காரியம் இருக்கே!

சீரியலில் அழ வைத்துவிட்டார்.. ஆனா நிஜத்தில் லட்சுமி அம்மா பண்ண காரியம் இருக்கே!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணன் ஓடி போய் திருமணம் செய்தததால் தான் லட்சுமி அம்மா இறந்துவிட்டார்

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸில் இறக்கும் காட்சியில் நடித்த லட்சுமி அம்மா, அதன்பிறகு இயக்குநருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

    பரபரப்புக்கு குறைவில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸில் இந்த வாரம் முழுக்க சோகம் தாண்டவமாடி வருகிறது. பாசக்கார அண்ணன் தம்பிகளான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் தாயாக இருந்த லட்சுமி அம்மாள் திடீரென இறந்து விடுகிறார். அவருடைய இறப்புச் செய்தி குடும்பத்தினருக்கு பேரிடியாக அமைகிறது. அவரின் இறப்பு செய்தி ஒவ்வொருவருக்காக சென்று கொண்டிருக்கும் நிலையில், குடும்பத்தில் இருந்து பிரிந்து இருக்கும் கண்ணனுக்கு இன்னும் தெரியவில்லை. அவரை தொடர்பு கொள்ள முயற்சிக்கும்போது கண்ணனிடம் போன் இல்லை.

    லட்சுமி அம்மாவின் தம்பிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் எல்லாம் வந்து சேர்கின்றனர். அம்மா இறந்த தகவல் தெரியாத கண்ணன் மட்டும் திருச்சிக்கு சென்று கொண்டிருக்கிறார். அதேநேரத்தில், மூர்த்தி வீட்டிற்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கின்றனர். லட்சுமி அம்மாவின் தம்பிகள் வந்ததும் குடும்பமே கண்ணீரில் மூழ்குகிறது. விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற ஐஸ்வர்யாவை, முல்லை அம்மா தடுத்து திருப்பி அனுப்பிவிடுவதால் அவருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கண்ணனைத் தொடர்பு கொள்ள ஐஸ்வர்யா முயற்சிக்கும்போது, ஃபோனில் சார்ஜ் இருக்கவில்லை. உடனடியாக சார்ஜ் போட்டுவிடும் அவர், எதிர்பாராதவிதமாக மயக்கமாகி கீழே விழுந்துவிடுகிறார். அப்போது, போன் அடிக்கிறது. அந்த போன் கண்ணனாக இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தகவல் அறிந்து வீட்டுக்கு வரும் சுந்தரம், மீனா மற்றும் ஜீவாவுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்கிறார். சடங்குக்கு தேவையான வேலையை செய்வோம் என்று தனத்தோட அண்ணனிடம் பேசிவிட்டு கண்ணனையும் திட்டுகிறார். அவர் மட்டுமில்லை பக்கத்து வீட்டில் இருப்பவர்கள், லட்சுமி அம்மாவின் நாத்தனார் எல்லோரும் கண்ணன் ஓடி போய் திருமணம் செய்தததால் தான் லட்சுமி அம்மா இறந்துவிட்டார் என பேசுகின்றனர். அதனால் மூர்த்திக்கு ஒருபக்கம் கண்ணன் மீது கோபம் தலைக்கு ஏறுகிறது. அப்படியே மல்லிகாவுக்கு தகவல் சொல்லப்படுகிறது.




    வீட்டில் இருக்க முடியாத ஐஸ்வர்யா அழுதப்படியே மூர்த்தி வீட்டுக்கு வர எல்லோரும் அவரை திட்டி தீர்க்கின்றனர். ஐஸ்வர்யாவை கல்யாணம் பண்ண ராசி தான் லட்சுமி அம்மாவுக்கு இப்படி நடந்ததாகவும் ஊர் முன்னாடி பேசி அவமானப்படுத்துகிறார். ஒருமுறை கடைசியாக லட்சுமி அம்மாவை பார்க்க வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சிகிறார் ஐஸ்வர்யா. ஆனால் மீனா உட்பட யாருமே அவரை வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. கண்ணன், தன்னுடைய அம்மாவின் இறுதிச் சங்கில் கலந்து கொள்வாரா? அவருக்கு தகவல் தெரிவிக்கப்படுமா? என்பது இப்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.

    சீரியல் இப்படி பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் சூழலில் லட்சுமி அம்மா, இறந்த எபிசோடை நடித்துக் கொடுத்துவிட்டு கூலாக பாண்டியன் ஸ்டோர்ஸ் இயக்குநருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்தப் புகைப்படத்தையும் சமூகவலைதளத்தில் அவர் பகிர்ந்துள்ளதால், அதனைப் பார்த்த நெட்டிசன்கள் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..என கிண்டலாக பதிவிட்டுள்ளனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: