• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இதல்லவா தாய் பாசம்.. கண்ணனை தேடி வந்து பார்த்த லட்சுமி அம்மா!

இதல்லவா தாய் பாசம்.. கண்ணனை தேடி வந்து பார்த்த லட்சுமி அம்மா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணனால் தான் லட்சுமி அம்மா இறந்து விட்டதாக ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணனை ஒதுக்கி வைக்கிறது

  • Share this:
    கடைசி வரை கண்ணனை பார்க்க முடியாமல் சோகத்தில் இருந்த லட்சுமி அம்மா, அவரே தேடி வந்து கண்ணனை சந்தித்த நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா மறைவு எபிசோடுகள் டி.ஆர்.பியை எகிற வைத்துள்ளது. இந்த காட்சிகள் இடம் பெற்ற எபிசோடுகளால்  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இந்த வார டி.ஆர்.பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. கடைக்குட்டி கண்ணனை பார்க்காமலே அவர் இறந்து விட்டதாக, கண்ணனால் தான் லட்சுமி அம்மா இறந்து விட்டதாக ஒட்டு மொத்த குடும்பமும் கண்ணனை ஒதுக்கி வைக்கிறது. இதுப்போன்ற சென்டிமென்ட் சீன்களால் பாண்டியன் ஸ்டோஸ் சீரியலை பலரும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். கதையின் தேவையை உணர்ந்து கண்ணனாக நடிக்கும் சரவணன், தனது முடியை எடுத்து மொட்டை அடித்துள்ளார். நடிப்பின் மீது அவர் கொண்ட ஆர்வம் இதில் தெரிவதாக பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.

    சீரியலில் தான் கண்ணனை பார்க்காமல் லட்சுமி அம்மா சென்றார் என்றால், நிஜத்திலும் அப்படி தான். லட்சுமி அம்மாவாக நடிக்கும் ஷீலாவின் இறப்பு குறித்த காட்சிகள் படமாக்கப்பட்ட நேரத்தில் கண்ணன் செட்டில் இல்லையாம். அவர் காட்சிகள் முடிந்து செட்டுக்கு வந்து ஷீலா அம்மாவை தேடினார் போல, ஆனால் அதற்குள் ஷீலா ஷூட்டிங்கை முடித்து வீட்டுக்கு கிளம்பிவிட்டாராம். எனவே, அன்றைய தினம் நிஜத்திலும் கண்ணனை லட்சுமி அம்மாவால் பார்க்க முடியவில்லை. இதை அவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். இந்நிலையில், கண்ணனை தேடி வந்து பார்த்துள்ளார் ஷீலா அம்மா.



    அதே யூடியூப் சேனலுக்கு கண்ணன், பேட்டிக்காக அழைக்கப்பட்டார், அப்போது கண்ணனுக்கு சர்பிரைஸ் தர, சேனல் நிறுவனம் ஷீலா அம்மாவை நேரில் வரும் படி அழைத்துள்ளனர். உடனே ஓகே சொன்ன அவர், செட்டுக்கு நேராக வந்து கண்ணன் பார்த்து வாழ்த்தியும் உள்ளார். கண்ணனின் நடிப்பு குறித்து மனதார பாராட்டிய அவர், தனது குடும்பத்தில் சீன்களுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ் பற்றியும் பேசினார். சீரியலில் பாசமான அம்மா- பையனாக இருக்கும் இவர்கள் நிஜத்திலும் அப்படி இருப்பது பார்ப்பதற்கே அழகாக இருப்பதாக, தாய் பாசம் எப்பவும் ஸ்பெஷல் தான் என்கிறனர் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்.

    அதுமட்டுமில்லை, விஜய் டிவியில் கூடிய விரைவில் ஒளிப்பரப்பாகவுள்ள புது சீரியலில் நடிகையின் அம்மாவாக ஷீலா நடிக்கிறார். இதுவரை விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பார்த்தவரை வேறு சீரியலில் ரசிகர்கள் பார்க்கவுள்ளனர். இதை அவரே உறுதிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமில்லை, அவரின் மகன் விக்ராந்த்தால் தான் சீரியலில் இருந்து அவர் நீக்கப்பட்டார் என பரவும் தகவல் உண்மையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: