முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / லைலாவுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்... கவனம் பெறும் வீடியோ!

லைலாவுடன் நடனமாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்... கவனம் பெறும் வீடியோ!

லைலா - குமரன் தங்கராஜன்

லைலா - குமரன் தங்கராஜன்

எப்போதும் உங்களின் ரசிகன், குறிப்பாக இந்தப் பாடலில்.. எனத் தலைப்பிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' புகழ் குமரனுடன் நடிகை லைலா நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அவரது நடனக் கூட்டாளியும் கச்சிதமாகப் பொருந்திய மூத்த நடிகையின் அழகான வெளிப்பாடுகளைக் கண்டு ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நடிகை லைலா நடிகர்கள் அஜித்குமார், சியான் விக்ரம், சூர்யா, பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உட்பட தமிழ் சினிமாவின் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். 2006-ல் ஈரானிய தொழிலதிபர் மெஹ்தியை திருமணம் செய்த பிறகு, நடிப்பிலிருந்து விலகினார். கோவாவில் வசிக்கும் இந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

தனது மகன்கள் வளர்ந்துவிட்டதால் சமீபத்தில் மீண்டும் நடிக்கத் தொடங்கினார் லைலா. அவர் முதலில் கார்த்தியின் 'சர்தார்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கிய 'வதந்தி: தி ஃபேபிள் ஆஃப் வெலோனி' என்ற வெப்சீரிஸில் ஆங்கிலோ இந்தியன் தாய், ரூபியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இத்தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!


இந்நிலையில் 'வதந்தி' தொடரில், முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நடிகர் குமரன் தங்கராஜன், பிரபுதேவாவுடன் லைலா நடித்த 'அள்ளி தந்த வானம்' படத்தில் வரும் 'கண்ணாலே மியா மியா' பாடலுக்கு லைலாவுடன் நடனமாடும் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதற்கு, எப்போதும் உங்களின் ரசிகன், குறிப்பாக இந்தப் பாடலில்.. எனத் தலைப்பிட்டுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிராக நடித்து வரும் குமரன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores