குடும்ப பாங்கான சீரியல்களை மக்கள் எப்போதும் விரும்பி பார்ப்பார்கள். பல வகையான சீரியல்கள் இருந்தாலும், அவற்றில் சிலவற்றை மட்டுமே மக்கள் எப்போதும் விரும்பி பார்ப்பார்கள். நிறைய சீரியல்கள் ஒளிபரப்பட்டு வந்தாலும் அதில் சில மட்டுமே மக்களின் ஆதரவை பெரிதும் பெற்று விடும். இந்த வகையான சீரியல்களின் டாப் இடத்தில் ஏராளமான விஜய் டிவி சீரியல்கள் உள்ளன. குறிப்பாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பலர் விரும்பி பார்ப்பார்கள். இந்த சீரியலின் பெயருக்காகவே இது மிகவும் பிரபலமான ஒன்றாக ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள எல்லா கதாபாத்திரமும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. இதன் கதைக்களம் மற்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள் தான் இந்த சீரியலின் அடித்தளமாக உள்ளது. இதில் உள்ள ஒவ்வொருவரும் தங்களது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர். இல்லத்தரசிகளின் மிக பிடித்தமான சீரியலாக இது இருந்து வருகிறது.
இதையும் படிங்க.. தாமரையுடன் பேசினாரா சிவகார்த்திகேயன்? பிக் பாஸ் அல்டிமேட்டில் தெரிய வரும் அடுத்தடுத்த உண்மைகள்!
அதே போன்று இந்த சீரியலில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரனுக்கு அதிக பெண் ரசிகர்கள் உள்ளனர். இவரின் சிறப்பான நடிப்பையும், சாந்தமான கதாபாத்திரத்தையும் பலர் விரும்புவார்கள். குறிப்பாக இளம் வயதினருக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவர் ஒரு சிறந்த நடன கலைஞராவார். இதற்கு முன்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதே போன்று பல தொலைக்காட்சிகளிலும் பணியாற்றி உள்ளார்.
இதையும் படிங்க.. valimai FDFS டிக்கெட் வாங்கிய பிரபல இயக்குநர்… அதற்கு அவரின் அப்பா ரியாக்ஷன் என்ன தெரியுமா?
இவர் தனது சினிமா பயணத்தின் ஆரம்ப கட்டத்தில் சீரியல் நடிகை சுஹாசினி என்பவரை காதலித்து வந்தார். அதன்படி இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். இவர்கள் இருவருக்கும் அழகிய ஆண் குழந்தை போன்று உள்ளது. குமரன் எப்போதும் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருவார். அந்த வகையில் தனது குடும்பத்துடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள், ரீல்ஸ் செய்த வீடியோக்கள், ஷூட்டிங் ஸ்பாட் அரட்டைகள் ஆகியவற்றை பதிவிடுவது வழக்கம்.
இதே போன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் நடனமாடி வீடியோ வெளியிடுவதும் வழக்கமாக செய்து வருவார். இவற்றுடன் தனது மனைவி மற்றும் குடும்பத்துடன் எடுக்கும் புகைப்படங்களையும் அதிகம் பதிவிடுவார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர் பட்டாளம் பலர் இவரின் இன்ஸ்டா ஐடியை ஃபாலோ செய்து வருகின்றனர். அதே போன்று கதிரின் ரசிகர்களும் இவர் பெயரிலேயே இன்ஸ்டாவில் நிறைய பக்கங்கள் வைத்துள்ளனர். இந்த பக்கங்களை பலர் ஃபாலோ செய்து வருகிறார்கள். இவற்றில் கதிரின் அழகிய புகைப்படங்கள், நடன வீடியோக்கள், சீரியல் ஷாட்ஸ் ஆகியவற்றை பகிர்வார்கள். அந்த வகையில் சமீபத்தில் இது போன்ற ஒரு இன்ஸ்டா பக்கத்தில் குமரனின் திருமண புகைப்படம் ஒன்று பதிவிடப்பட்டது. அந்த வீடியோவை பலர் பார்த்து வருகின்றனர். இவர்கள் இருவரின் ஜோடி பொருத்தத்தை பலர் சிறந்த ஜோடி என்று கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் பலர் லைக்ஸ் செய்து வருகின்றனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.