• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • குடும்பத்தில் விரிசல்.. சண்டைபோடும் முல்லை! கதிர் யார் பக்கம்?

குடும்பத்தில் விரிசல்.. சண்டைபோடும் முல்லை! கதிர் யார் பக்கம்?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

மரியாதை இல்லாத பேச்சு கதிரை கஷ்டப்படுத்த அங்கிருந்து உடனே கிளம்புகிறான்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் வில்லி மல்லியால் மிகப் பெரிய விரிசல் ஏற்பட போவது உறுதியாகிவிட்டது. மல்லியின் முதல் காயில் விழுந்தது முல்லையும் கதிரும் தான்.

    கூட்டு குடும்பமாக வாழும் அண்ணன் - தம்பிகளின் கதை பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் இந்த சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. லட்சுமி அம்மாவின் 4 பையன்களும் எந்த கஷ்டத்திலும் ஒருவரையொருவர் விட்டு கொடுக்காமல் பாசத்துடன் வாழும் அண்ணன் - தம்பிகள். இப்படி இருக்க, கண்ணனின் திருமணத்திற்கு பிறகு மொத்த கதையும் தலைகீழானது. ஏற்கெனவே கண்ணனும் ஐஸ்வர்யாவும் ஒதுங்கி நிற்க, மொத்தமாக அவர்களை பிரித்து விட பிளான் செய்துவிட்டார் கஸ்தூரி அத்தாச்சி. அதற்காக தினமும் கண்ணன் வீட்டுக்கு போய் புது புது பிரச்சனைகளை செய்து கொண்டிருக்கிறார். இவருடன் வில்லி மல்லிகாவும் கூட்டு.

    மொத்தத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பிரித்து விட வேண்டும் என்பதே இவர்களின் ஆசை. அதற்கேற்ப கண்ணன் செய்த தவறு இன்று இந்த நிலைக்கு வந்துவிட்டது. மல்லிகா எறிந்த முதல் காயில் சிக்கியது முல்லையும் கதிரும் தான். முல்லையின் அம்மாவை கதிர் ஆஸ்பிட்டலுக்கு கூடிட்டு போக முல்லை வீட்டுக்கு வருகிறான். அந்த நேரம் பார்த்து அங்கு மல்லி இருக்க, அவரின் பேச்சு எல்லை மீறுகிறது. இனிமேல் அம்மாவை நீ ஆஸ்பிட்டலுக்கு கூடிட்டு போக வேண்டாம் என்று எடுத்தெறிந்து பேசுகிறாள் மல்லி. கதிர் பொறுமையாக முல்லை அம்மாவின் உடல்நிலை பற்றி விவரிக்க , பொறுமை இல்லாத மல்லி கத்தி கூச்சல் போடுகிறாள். முல்லையின் அப்பாவும் அம்மாவும் செய்வதறியாமல் நிற்கின்றனர். மல்லியின் மரியாதை இல்லாத பேச்சு கதிரை கஷ்டப்படுத்த அங்கிருந்து உடனே கிளம்புகிறான்.

    இந்த நேரம் பார்த்து, முல்லை கதிரை பார்க்க கடைக்கு வருகிறாள். ஆஸ்பிட்டலுக்கு போனீங்களா? என முல்லை கேட்க, கதிரும் போனதாக பொய் சொல்கிறான். ஆனால் அதற்குள் முல்லை அப்பா அங்கு வந்து, வீட்டில் நடந்த எல்லாவற்றையும் சொல்கிறார். இதனால் கோபத்தில் முல்லை மல்லியுடன் மல்லுக்கட்ட வீட்டுக்கு கிளம்புகிறாள். கதிர் எவ்வளவு தடுத்தாலும் முல்லை கேட்பதாக இல்லை. வீட்டுக்குள் போனவள், மல்லியை லெஃப்ட், ரைட் வாங்குகிறாள். பதிலுக்கு மல்லியும் பேச, அக்காவும் தங்கையும் சண்டைக்கு நிற்கிறார்கள்.

    அதுமட்டுமில்லை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பற்றி தப்பாக பேசும் மல்லி, தனம், கண்ணன் பற்றியும் தரக்குறைவாக பேசுகிறாள். இதனால் முல்லைக்கு கோபம் வர அவளும் மல்லியை அசிங்கப்படுத்துகிறாள். இதனால் கதிர் யார் பக்கம் பேசுவது என்றே தெரியாமல் நிற்கிறான். இவ்வளவு நாள் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மீது இருந்த மரியாதை கண்ணனால் குறைய தொடங்கிவிட்டது. கொஞ்சம் கொஞ்சமாக சொந்த பந்தங்களுடன் விரிசல் ஏற்படவும் தொடங்குகிறது. இதற்கு தான் கஸ்தூரி அத்தாச்சியும் மல்லியும் வெயிட்டிங்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: