பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் கதிர் ஹோட்டலில் வேலை செய்யும் விஷயம் முல்லைக்கு தெரிந்து விட்டது. இதை தாங்க முடியாமல் அதிர்ச்சியில் கலங்கி நிற்கிறார் முல்லை.
அழகாக, ஒற்றுமையாக வாழ்ந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் புயல் வீசிக் கொண்டிருக்கிறது. மீனா அப்பா செய்த பிரச்சனையால் இப்போது கதிர் - முல்லை வீட்டை விட்டு சென்று விட்டனர். இந்த கவலையில் மூர்த்தி நெஞ்சு வலியில் படுத்து விட்டார். தனம் இப்போது மளிகை கடைக்கு செல்கிறார். மொத்த குடும்பமும் கதிரை மிஸ் செய்கின்றனர். ஆனால் கதிர், வைராக்கியத்துடன் கடனை அடைக்க கஷ்டப்படுகிறார். கதிர் - முல்லை இருவரும் தனியாக வீடு எடுத்து தங்கி இருக்கிறார்கள். இவர்களை ஜீவா மட்டும் அடிக்கடி வந்து பார்த்து செல்கிறார்.
கல்யாணத்திற்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சி.. விஜய்டிவி புகழை தேடி செல்லும் வாய்ப்பு?
இந்நிலையில் கதிர் ஹோட்டலில் வேலை செய்வது ஜீவாவுக்கு தெரியும். அந்த ஹோட்டலில் ஜீவா டெலிவரி பண்ண செல்ல, அங்கு கதிர் சாப்பாடு பரிமாறுவதை பார்த்து கலங்கி போய் விடுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் கதிர் ஹோட்டலில் வேலை செய்வதை முல்லையின் அம்மா பார்த்து விடுகிறார். முல்லையின் அப்பா - அம்மா இருவரும் தற்செயலாக அங்கு சாப்பிட போக, அங்கு இலையை போட்டு சாப்பாடு பரிமாறுகிறார் கதிர்.
அவரை பார்த்ததும்
முல்லையின் அம்மா கத்த தொடங்குகிறார். இவர்கள் வந்தது கதிருக்கும் அதிர்ச்சி தான். வழக்கம் போல் முல்லை அம்மா கத்திவிட்டு அங்கிருந்து கிளம்பி விடுகிறார். அவரை சமாதானம் செய்து முல்லையின் அப்பா அங்கிருந்து அழைத்து செல்கிறார். உடனே முல்லையின் வீட்டுக்கு போகும் அவர், தனது மகளிடம் எல்லா உண்மைகளையும் சொல்லி விடுகிறார். கதிர், சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யவில்லை, ஹோட்டலில் ஹெல்பராக இருக்கிறார் என்பதை சொன்னதும் முல்லைக்கு அழுகை தாங்கல. தனக்காக கதிர் கஷ்டப்படுவதை நினைத்து கண்ணீர் விடுகிறார்.
ஒருவழியா பாவ்னி - அமீர் வாழ்க்கையில் அது நடக்க போகுது.. குவியும் வாழ்த்துக்கள்!
ஆனால் அதற்குள் முல்லையின் அம்மா, தனத்திடம் சண்டை போட மூர்த்தி வீட்டுக்கு செல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது. கோபத்தில் கண்டிப்பாக மொத்த குடும்பத்தையும் அவர் திட்டி தீர்ப்பார். அந்த சீன்கள் நாளைய எபிசோடில் ஒளிப்பரப்பாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.