Home /News /entertainment /

10 ஆம் வகுப்பில் திருமணம்.. எல்.ஐ.சி ஏஜெண்ட்! தனியாக நின்று ஜெயித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி!

10 ஆம் வகுப்பில் திருமணம்.. எல்.ஐ.சி ஏஜெண்ட்! தனியாக நின்று ஜெயித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி

பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி

கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானார். அங்கிருந்து அவரின் மொத்த வாழ்க்கையும் தலைகீழானது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கஸ்தூரி அத்தாச்சியாக, பாக்கியலட்சுமி சீரியலில் செல்வி அக்காவாகவும் ரசிகர்களை மகிழ்விக்கும் கம்பம் மீனாவின் ரியல் லைஃப் ஸ்டோரி.

  சின்னத்திரையில் எப்போதுமே வட்டார மொழி பேசும் கலைஞர்கள் மிக மிக குறைவு. அந்த வகையில் விஜய் டிவியை எடுத்துக் கொண்டால் கிராம பிண்ணனி கொண்ட சீரியல்களில் பெரும்பாலும் தெற்கத்திய கலைஞர்கள், வட்டார மொழி பேசும் கலைஞர்களை அதிகம் பார்க்கலாம். அந்த வரிசையில் முதலில் இருப்பவர் கம்பம் மீனா. இயக்குனர் இமயம் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட கம்பம் மீனா உண்மையில் மிகவும் துணிச்சலான பெண். இவரின் ரியல் லைஃப் ஸ்டோரியை கேட்டால் கண்டிப்பாக பெண்களுக்கு மோட்டிவெஷனாக இருக்கும். சின்ன கிராமத்தில் இருந்து வந்து இன்று தனக்கென தனி அடையாளத்தை சின்னத்திரை பிளஸ் வெள்ளித்திரை இரண்டிலும் பிடித்துவிட்டார். இவரின் வட்டார மொழி பேச்சு தான் இவரின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் என்றே சொல்லலாம் .

  கம்பம் மீனாவின் நிஜப்பெயர் நாச்சி முத்து மீனா. இவரின் முதல் சீரியல் தெற்கத்தி பொண்ணு தான். இவரின் சினிமா பயணத்தை தொடங்கி வைத்தவரே இயக்குனர் பாரதி ராஜா தான். இதுவரை கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் கம்பம் மீனா நடித்துள்ளார். ஆனால் அதுவரை கிடைத்திடாத புகழை பாண்டியன் ஸ்டோர்ஸ் கஸ்தூரி அத்தாச்சி ரோல் வாங்கி கொடுத்தது. தெற்கத்தி பொண்ணான கம்பம் மீனா பல முயற்சிகள் போராட்டங்களுக்கு பிறகு தான் இந்த இடத்தை பிடித்தார். விஜய் டிவியிலேயே பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்யலட்சுமி, தேன்மொழி பி.ஏ என தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மீனா பத்தாம் வகுப்பு படிக்கும் போதே திருமணம் ஆகிவிட்டது. வாழ்க்கை குறித்த புரிதல் தெரிவதற்குள் 2 குழந்தைகள். கணவருக்கு உதவ, எல்.ஐ.சி ஏஜெண்டானார். கம்பம் சுற்று வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம். இளமையிலேயே நன்கு உழைக்க ஆரம்பித்தார். 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா தெற்கத்திபொண்ணு சீரியலை தேனி மாவட்டத்தில் எடுத்துக் கொண்டிருந்த போது கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்க மீனா தேர்வானார். அங்கிருந்து அவரின் மொத்த வாழ்க்கையும் தலைகீழானது. அதையடுத்து சிலம்பாட்டம், வெடிகுண்டு முருகேசன், பூவா தலையா என பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க சீக்கிரத்தில் வெள்ளித்திரையில் ஜொலிக்க தொடங்கினார்.
  தொடர்ந்து, மாயாண்டி குடும்பத்தார், முண்டாசுபட்டி, களவாணி, மாத்தி யோசி ,ராவணன், கடல், கைதி, சகுனி என பல படங்களில் நடித்துள்ளார். அண்ணி, அம்மா, தங்கை, அக்கா கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னொரு சுவாரசியம் என்வென்றால் மறைந்த இயக்குனர் தாமிராவின் இரட்டை சுழி படத்தில் இயக்குனர் பாரதிராஜா மருமகள் ரோலில் நடித்தார். எந்த இயக்குனரால் அறிமுகப்படுத்தப்பட்டாரோ அதே இமயத்துடன் நடிப்பை திரையில் பகிர்ந்தார். சமீபத்தில் தான் இவரின் மகனுக்கு திருமணம் நடந்தது. சின்ன கிராமத்தில் இருந்து வந்து இன்று நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து சின்னத்திரை , வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கிறார் கம்பம் மீனா.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published:

  Tags: Vijay tv

  அடுத்த செய்தி