விபத்தில் சிக்கிய ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன்

சரவண விக்ரம்

உடல் முழுவதும் வலியுடன் 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றார்.

 • Share this:
  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் சரவண விக்ரம் விபத்தில் சிக்கியதாக அவரது சகோதரி தெரிவித்துள்ளார்.

  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நிறைய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மூர்த்தி - தனம், ஜீவா - மீனா, கதிர் - முல்லை என முதல் 3 பேரும் திருமணமாகி தங்கள் அம்மாவுடன் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர். கடைக்குட்டி கண்ணன் விளையாட்டுத்தனம் மிக்கவன்.

  இதில் கண்ணனாக நடித்து வருபவர் நடிகர் சரவண விக்ரம். தற்போது கண்ணனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நடந்த காதல் திருமணம் தான் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஹாட் டாபிக். இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் திருமண காட்சி படப்பிடிப்பின் போது, கண்ணனக நடித்து வரும் சரவண விக்ரம் விபத்து ஒன்றை சந்தித்ததாக அவரது சகோதரி சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  இது குறித்து பதிவிட்டுள்ள அவர், “பாண்டியன் ஸ்டோர்ஸில் நடந்து வரும் திருமண காட்சி படப்பிடிப்பின் போது, என் சகோதரர் ஒரு சிறிய விபத்தில் சிக்கி (வாகனம் ஓட்டும்போது) காயமடைந்தார். உடல் முழுவதும் வலியுடன் 4 மணி நேரத்திற்குள் மீண்டும் படப்பிடிப்புக்குச் சென்றார். அவரால் சில நாட்கள் சரியாக நடக்க முடியவில்லை... தனது வலியைக் கூட தன் குழுவினரிடம் காட்டவில்லை. ஆனால் விபத்து நடந்தாலும் அவரது நடிப்பு அப்படியே இருந்தது. என் சகோதரரின் மன உறுதியை பார்த்த பிறகு நான் அவரை நினைத்து பெருமைப்பட்டேன். அப்படிப்பட்ட மாணிக்கம் அவர், உங்களுக்கு ஹேட்ஸ் ஆப் அண்ணா, தொடர்ந்து என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்கள் எல்லையற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Shalini C
  First published: