• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • சொல்லி கொடுத்த ஐஸ்வர்யா! அண்ணன்களை பகைத்து கொண்டு வாயை நீட்டும் கண்ணன்!

சொல்லி கொடுத்த ஐஸ்வர்யா! அண்ணன்களை பகைத்து கொண்டு வாயை நீட்டும் கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

கண்ணனின் பேச்சுக்கள் எல்லை மீற அடுத்து சண்டை வெடிக்கிறது.

 • Share this:
  ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு கண்ணன், தனது அண்ணன்களின் சண்டை போடும் அடுத்தடுத்த காட்சிகள் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரவுள்ளது.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இதுவரை எதிர்பாராத திருப்பங்களாக அடுத்தடுத்த நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. சீரியலை பார்ப்பவர்களும் தினம் தினம் ஏகப்பட்ட ட்விஸ்ட்டுகளுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர். ஐஸ்வர்யா ரோல் மாற்றப்பட்ட பிறகு தீராத சர்ச்சையாக ஓடிக் கொண்டிருந்த சீரியலில் அனைவரின் கவனமும் லட்சுமி அம்மா பக்கம் திரும்பியது. திடீரென்று அவர் இறப்பது போல் கதையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. சென்ற வாரம் முழுவதும் இதுத்தொடர்பான காட்சிகள் தான் ஒளிப்பரப்பாகின. சீரியலில் லட்சுமி அம்மா இறப்பது போல் காட்சிகள் காட்டப்பட்டாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரிடம் பல யூடியூப் சேனல்கள் பேட்டி கண்டு வருகின்றன. லட்சுமி அம்மா இறந்தது தான் துயரம் என்றால் அதற்கு அடுத்தது கண்ணனின் முகத்தை அவர் பார்க்காமலே சென்றது போல் காட்சிகள் வைக்கப்பட்டது தாய்மார்களை கண்ணீர் விட வைத்தது.

  இந்நிலையில் இதுதொடர்பாக இன்று ஒளிப்பரப்பாகவுள்ள எபிசோடில் கண்ணன் கோபத்தில் தனது அண்ணன்களை எதிர்த்து பேசுகிறார். நேற்றைய தினம் குன்னக்குடி வந்த கண்ணன், டவுன் பஸ் ஸ்டாப்பில் லட்சுமி அம்மாவின் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து பதற்றம் அடைகிறான். வழியில் மரத்துக்கு கீழே உட்கார்ந்து கொண்டு அழுதுக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவிடம் இதுக் குறித்து விசாரிக்க எல்லாவற்றையும் ஐஸ்வர்யா சொல்கிறாள். ஆனாலும் கண்ணனின் மனம் அதை ஏற்க மறுக்கிறது. ஐஸ்வர்யாவின் பேச்சை நம்பாத கண்ணன் ஷாக்கில் நிற்கிறான். அப்போது ஊர் பெரியவர்கள் கண்ணனை கட்டிப்பிடித்து அழ கண்ணனுக்கு நடந்தது எல்லாமே புரிகிறது. எப்படியாவது அம்மாவின் முகத்தை பார்த்துவிட வேண்டும் என்று ஓடுகிறான்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சுடுகாட்டில் கண்ணன் வருவான் என அண்ணன்கள் காத்திருந்தாலும் ஊர் பெரியவர்கள் பொறுப்பதாக இல்லை. 6 மணிக்கு மேல் தீ வைக்க கூடாது என வற்புறுத்துகின்றனர். ஆனாலும் கதிர் - ஜீவா பிடிவாதமாக நிற்கிறார்கள். ஆனால் ஊர் விதிமுறைக்கு கட்டுப்பட வேண்டிய சூழ்நிலையில் அவர்கள் இருப்பதால் வேறு வழியில்லாமல் மூர்த்தி லட்சுமி அம்மா உடலுக்கு தீ வைக்கிறார். அந்த பக்கம் கண்ணன் தலைதெறிக்க ஓடி வந்து சேர்கிறான். ஆனாலும் பலனில்லை. கடைசி வரை அவனால் லட்சுமி அம்மாவின் முகத்தை பார்க்க முடியவில்லை. அம்மா.. அம்மா.. என கதறி துடிக்கிறான். தம்பி தனியாக அழுவதை பார்த்து மூர்த்தி நெஞ்சம் பதற, மீனாவின் அப்பா அவரை சமாதானம் செய்து வீட்டுக்கு எல்லோரையும் அழைத்து செல்கிறார்.

  சுடுகாட்டில் தனியாக நின்று அழுது தீர்த்த கண்ணன், சில மணி நேரம் கழித்து வீடு திரும்புகிறான். ரோட்டில் அவனுக்காக ஐஸ்வர்யா காத்திருக்க, கண்ணனை பார்த்தது காலையில் இருந்து நடந்த எல்லாவற்றையும் ஐஸ்வர்யா சொல்கிறாள். மூர்த்தி மற்றும் ஜீவா, கதிர் என அனைவரும் திட்டமிட்டே லட்சுமி அம்மாவின் முகத்தை பார்க்கவிடாமல் செய்ததாகவும், கண்ணன் வருவதற்குள்ளே சடங்கு செய்து அவரை சுடுகாட்டிற்கு எடுத்து சென்றதாகவும் கூறுகிறாள்.

  இதையெல்லாம் கேட்டு கோபத்தின் உச்சத்திற்கு சென்ற கண்ணன், மூர்த்தி வீட்டை நோக்கி புறப்படுகிறான். தனது அண்ணன்களிடம் கோபத்தில் கூச்சலிடுகிறான். அம்மாவின் முகத்தை பார்க்க விடாமல் செய்ததாக கதறி துடிக்கிறான். “நான் என்ன பெரிய தப்பு செஞ்சிட்டேன். எங்க அம்மாவ பார்க்க விடாம செய்ய நீங்க எல்லா யாரு?” என கண்ணனின் பேச்சுக்கள் எல்லை மீற அடுத்து சண்டை வெடிக்கிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: