மூட்டை தூக்கி கஷ்டப்படும் கண்ணண்.. ஒரு காதல் திருமணம் இவ்வளவு கஷ்டத்தை தருமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு டோர் டெலிவரி செய்ய கிளம்புகிறான்.

 • Share this:
  வீட்டுக்கு தெரியாமல் கண்ணன் செய்த காதல் திருமணம் அவரை மூட்டை தூக்கும் அளவிற்கு கொண்டு சென்றுவிட்டது.தன் நிலைமையை நினைத்து கண்ணன் வருந்துவது தான் இன்றைய பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோடு

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்டில் கடந்த 1 மாத காலமாக கண்ணன் -ஐஸ்வர்யா திருமண கதை தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்த கண்ணனை ,மூர்த்தி வீட்டை விட்டு வெளியே அனுப்பி விடுகிறார். தங்க இடம் இல்லாமல் சாப்பாடு இல்லாமல் கஷ்டப்பட்ட கண்ணன், மீனாவின் உதவியால் ஒரு வீடு கிடைத்து அதில் ஐஸ்வர்யாவுடன் தங்கி இருக்கிறார். இந்த நேரத்தில் தான் கல்லூரி சென்று கொண்டே பார்ட் டைமில் ஏதாவது வேலைக்கு செல்லலாமல் என முடிவு எடுத்த கண்ணனும் - ஐஸ்வர்யாவும் நேற்றைய தினம் மீனாவின் அப்பா கடைக்கு செல்கின்றனர்.

  டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை கேட்டு இருவரும் நிற்க, மீனாவின் முகத்திற்காக சில வார்த்தைகளை பேசிவிட்டு கடைசியில் வேலை தருகிறார் சுந்தரம். இன்றைய எபிசோட்டில் வேலைக்கு சேர்ந்தே முதல் நாளே கண்ணனை மீனாவின் அப்பா மூட்டை தூக்க சொல்கிறார். கண்ணன், சற்று தயங்கி நிற்க, எல்லாமே வேலை தான் செய் என்று சொல்கிறார் சுந்தரம். ஐஸ்வர்யாவின் முகமும் மாறுகிறது. ஆனால் வேறு வழியில்லை வேலைக்கு வந்தாச்சி சொன்னத்தை செய்வோம் என்பதே போலவே கண்ணன் ஒவ்வொரு மூட்டையாக தூக்கி வந்த குடோனில் வைக்கிறார். அப்போது தான் அண்ணன்களின் ஞாபகம் கண்ணனுக்கு வருகிறது.

  வீட்டில் செல்ல பிள்ளை, கடைக்குட்டியாக வளர்ந்த கண்ணனை வீட்டில் ஒருவரும் வேலை வாங்க மாட்டார்கள். படிப்பது மட்டும் தான் கண்ணனின் வேலை.ஆனால் இப்போது வீட்டுக்கு தெரியாமல் கண்ணன் செய்த திருமணத்தின் பரிசாக படிக்கும் வயசில் கண்ணனுக்கு இந்த நிலைமை. இதில் கொடுமை என்னவென்றால் பில்லில் 10 மூட்டைகள் என கணக்கு போட்டிருக்க கண்ணன் 8 மூட்டைகளை மட்டுமே எடுத்து வந்து குடோனில் வைத்து, அதற்கும் மீனாவின் அப்பாவிடம் திட்டு வாங்குகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  ஆனால் ஐஸ்வர்யா அப்படி இல்லை, கடைக்கு வேலைக்கு சேர்ந்த முதல் நாலே சுந்தரத்தின் மனதில் இடம் பிடித்துவிட்டார். கண்ணனுக்கு மூட்டை தூக்கும் வேலை என்றால் ஐஸ்வர்யாவுக்கோ பில் போடும் வேலை. சுந்தரம் ஐஸ்வர்யாவை மனம் விட்டு பாராட்ட, மீண்டும் தப்பு செய்து கண்ணன், மீனா அண்ணியின் அப்பாவிடம் திட்டு வாங்குகிறான். இனிமேல் இப்படி நடந்தால் வேலையை விட்டு அனுப்பிவிடுவேன் என்று கூறியவர் கண்ணனை டோர் டெலிவரி செய்ய அனுப்புகிறார்.

  கண்ணனின் மனசு கஷ்டப்பட கூடாது என நினைத்த ஐஸ்வர்யா, அவனிடம் ஆறுதலாக பேசுகிறார். ஆனால் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு டோர் டெலிவரி செய்ய கிளம்புகிறான். அப்போது தான் சைக்கிளில் செல்லும் போது டெலிவரி பாக்ஸ் ஒன்று தவறுதலாக கீழே விழுகிறது. அதை எடுத்தது வேற யாருமில்லை கதிர் தான். உடனே அந்த பாக்ஸை எடுத்துகொண்டு சைக்கிளை ஃபாலோ செய்கிறார் கடைசியில் பார்த்தால் அது கண்ணன். வேறு வழியில்லாமல் அவரே அதை சைக்கிளில் வைத்து கட்டி விடுகிறார். தம்பியை இந்த கோலத்தில் பார்த்ததும் அண்ணன் மனம் துடிக்கிறது. கதிரே வாய்விட்டு கண்ணனிடம் பேசுகிறான். முதல் கேள்வியே காலேஜ் போகலையான்னு தான். பார்ட் டைம் என கண்ணன் பதில் சொல்ல, இப்பவாது பொறுப்பு வந்துன்னு கிளம்புகிறார். அம்மா பற்றி கண்ணன் கேட்க, ஒரே வார்த்தையில் பதில் சொல்லி அங்கிருந்து செல்கிறார்.

  பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டை பார்த்தது கண்ணனின் சைக்கிள் தானாகவே நிற்க, தைரியமாக அம்மாவை பார்க்க கண்ணன் வீட்டுகுள் செல்கிறான். அடுத்து என்ன ஆகும் என்பது நாளைக்கு தன் தெரியும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: