• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • விடாத ஆசை.. திருநெல்வேலி டூ சென்னை பயணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக ஐஸ்வர்யா எடுத்த ரிஸ்க்!

விடாத ஆசை.. திருநெல்வேலி டூ சென்னை பயணம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்காக ஐஸ்வர்யா எடுத்த ரிஸ்க்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

சீரியலில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கேரக்டரில் நடிக்க, விஜே தீபிகா மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பற்றி அறிமுகமே தேவையில்லை. இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட் சீரியல். அதுமட்டுமில்லை .டி.ஆர்.பியில் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. இந்த சீரியலில் சின்ன ரோலில் நடித்தால் கூட போதும் உடனே அவர்கள் சின்னத்திரையில் பிரபலமாகிவிடுவார்கள். அந்த வரிசையில் விஜே தீபிகாவும் ஒருவர். இப்போது சீரியலில் இவரின் கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பயணித்துக் கொண்டிருக்கிறது.

    வாய்ப்பு தேடி அலைந்த ஐஸ்வர்யாவுக்கு இந்த வெற்றி மிகவும் நெருக்கமானது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சின்ன கிராமத்தில் பிறந்த இவர் சினிமாவில் நுழைவதை கனவாக கொண்டிருக்கிறார். அந்த தீராத ஆசையை நிறைவேற்றிக்கொள்ள திருநெல்வேலியில் உள்ள கல்லூரியில் பிஎஸ்சி கம்யூட்டர் சயின்ஸ் படிப்பை முடித்துவிட்டு மேற்படிப்பை சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து படிக்க தொடங்கினார். அப்படியே ஆங்கரிங்கில் வாய்ப்பு தேடியும் அலைந்தார். அப்போது தான் கலைஞர் டிவியில் தொகுப்பாளராக வாய்ப்பு கிடைத்தது. அதனைத்தொடர்ந்து, சன்டிவியின் சந்திரகுமாரி சீரியலில் நடித்தார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்திலும் கல்லூரி மாணவியாக நடித்தார்.

    also read..சீரியலில் நல்ல தங்கை.. ஆனால் நிஜத்தில் அம்மாவுக்காக ’நாம் இருவர் நமக்கு இருவர்’ ஐஸ்வர்யா செய்த காரியம்!

    இயல்பான பக்கத்து வீட்டு பெண் போல் முக தோற்றம் கொண்டதால் இவரை ரசிகர்கள் எளிதில் ஏற்றுக்கொண்டனர். அதன்பிறகு மீண்டும் விஜய் டிவியின் சுந்தரி நீயும் சுந்தரன் நானும் தொடரிலும் நடித்தார்.

    மேக்கப் இல்லாமல் வீஜே தீபிகா

    பிறகு விஜய் டிவியின் பிரபலமான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிப்பதற்காக பலமுறை முயற்சி செய்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இவருக்கு அந்த கேரக்டர் கிடைக்காமல் போனது. பின்பு ஒருவழியாக செலக்ட் ஆகி இப்போது நடிப்பில் கலக்கி வருகிறார். கண்ணன் – ஐஸ்வர்யா ஜோடிக்கு இன்ஸ்டாவில் ரசிகர்கள் பட்டாளம் அதிகம். இருவரும் இணைந்து கலக்கும் ரீல்ஸ்கள் லைக்ஸ்களை அள்ளுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: