• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் குடும்பம் தான் சொத்து..கடைக்குட்டி கண்ணன் கெரியர்!

சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் குடும்பம் தான் சொத்து..கடைக்குட்டி கண்ணன் கெரியர்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்

அப்பா- அம்மா என பாசக்கார பையன். ஆனால் கண்ணனுக்கு அண்ணன்களுக்கு பதில் செல்ல தங்கை உள்ளார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடைக்குட்டி தம்பியாக கண்ணன் ரோலில் நடிக்கும் சரவண விக்ரம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்கள் இதோ

    சமீபகாலமாக சின்னத்திரை நடிகர் நடிகைகள் மீது ரசிகர்களுக்கு அதிகப்படியான ஈர்ப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. தினமும் சேனல்களில் அவர்களை பார்ப்பதால் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர். சீரியலை தவிர்த்து அவர்களின் பெர்சனல் லைஃப் எப்படி? அவர்கள் குடும்பம், சொந்த ஊர் என அவர்களை குறித்த தேடல்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியின் கடைசி தம்பியாக வீட்டுக்கு கடைக்குட்டி கண்ணனாக நடிக்கும் விக்ரம் சரவணனுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். இன்ஸ்டாவில் இவரை பின் தொடர்பவர்களில் பெண்கள் தான் அதிகம். குறிப்பாக கல்லூரி பெண்கள் மத்தியில் விக்ரம் சரவணன் அதிகம் பேசப்படும் சீரியல் நடிகராக உள்ளார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்துள்ளது. கதையில் அண்ணன் அண்ணிகளை மதித்து குடும்பத்தை உயிராய் நினைத்து வாழும் செல்ல தம்பி தான் கண்ணன். ஆனால் வீட்டுக்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்ததால் சீரியலில் கண்ணனை மொத்த குடும்பமும் ஒதுக்கி வைத்துவிட்டனர். நிஜத்திலும் கண்ணன் வாழ்க்கை சீரியலை போல தான் . அப்பா- அம்மா என பாசக்கார பையன். ஆனால் கண்ணனுக்கு அண்ணன்களுக்கு பதில் செல்ல தங்கை உள்ளார். இவரின் புகைப்படம் கூட சமீபத்தில் இணையத்தில் வைரலானது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    கண்ணனின் சொந்த ஊர் மதுரை தேனி பக்கம். பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு எல்லாமே திருச்செந்தூரில் தான். இவரின் அப்பா பிரபல மினரல் கம்பெனியில் ஜிஎம் ஆக உள்ளார். அப்பாவின் பேச்சை தட்டாத பிள்ளை. பாய்ஸ் ஸ்கூலில் படித்து விட்டு மெக்கானிக்கல் இன்ஜீனியரிங் படித்தார். ஆனால் கண்ணனுக்கு மீடியா மீதும் தீராத ஆசை. பெற்றோரின் சம்மத்தை வாங்கி கொண்டு சென்னை வந்தவர் 10 க்கும் மேற்பட்ட குறும்படங்களில் நடித்துள்ளார். அப்போது தான் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சின்ன தம்பி சீரியல் வாய்ப்பு தேடி வந்தது. சில எபிசோடுகளில் மட்டுமே நடித்தார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Pandianstoresserial இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@pandianstoresserial)






    இவரின் நடிப்பைப் பார்த்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருக்கு கடைசி தம்பி கண்ணனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இன்று சீரியலில் கலக்கி வருகிறார். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் ஊருக்கு கிளம்பி விடுவார். குடும்பத்துடன் நேரம் செலவிட்டு பின்பு சென்னைக்கு வந்து விடுவார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: