• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • முன்னாள் ஐஸ்வர்யாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் சென்ற இடம்... எங்கு தெரியுமா?

முன்னாள் ஐஸ்வர்யாவுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் சென்ற இடம்... எங்கு தெரியுமா?

கண்ணன் - ஐஸ்வர்யா

கண்ணன் - ஐஸ்வர்யா

கண்ணனாக நடித்து வரும் சரவண விக்ரமும், முன்னாள் ஐஸ்வர்யாவுமான விஜே தீபிகாவும் தனித்தனியே யூ-ட்யூப் சேனல் நடத்தி வருகிறார்கள்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் பழைய ஐஸ்வர்யாவுடன் ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளார்.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரஸ்யமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் மொத்த குடும்பமும் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். அதோடு வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள். இந்த எபிசோடின் போது, கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்த வி.ஜே.தீபிகா மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக தற்போது ‘ஈரமான ரோஜாவே’ சாய் காயத்ரி ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    தீபிகாவின் முகப்பருவே அவரது வெளியேற்றத்திற்குக் காரணம் என சொல்லப்பட்டது. கண்ணனாக நடித்து வரும் சரவண விரமும், முன்னாள் ஐஸ்வர்யாவுமான விஜே தீபிகாவும் தனித்தனியே யூ-ட்யூப் சேனல் நடத்தி வருகிறார்கள். சேனல் தான் வெவ்வேறே தவிர, இருவரும் இணைந்தே வீடியோக்களை பதிவிடுகிறார்கள்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இந்நிலையில் சரவண விக்ரமும், தீபிகாவும் கோவையிலுள்ள ஈஷா யோகா மையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் எடுத்துக் கொண்ட படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Shalini C
    First published: