உடல்நலம் பாதிக்கப்பட்ட முல்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திருப்பம்

வரும் ஜூன் 27-ம் தேதி முதல் பாண்டியன் ஸ்டோர்ஸ் புதிய எபிசோட்கள் ஒளிபரப்பாகும் என்று விஜய் டிவி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்ட முல்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் திருப்பம்
நடிகை சித்ரா
  • Share this:
கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குன்னக்குடியில் மூர்த்தியும் அவரது தம்பிகளும் கடை நடத்தி வருகின்றனர். ஜீவா மற்றும் கதிர் இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ஊரடங்குக்கு முன்னர் கதைப்படி மீனா கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர் உண்மையிலேயே கர்ப்பமாக இருப்பதை அறிந்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆரம்பத்தில் எலியும் பூனையுமாக காட்டப்பட்ட கதிர் - முல்லை கதாபாத்திரங்கள், திருமணத்துக்கு பின்னர் ரொமான்ஸில் அசத்தி வருகின்றனர். இவர்கள் இருவரது கண்களும் பேசும் காதல் மொழிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது.


அதனால் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் டிவி வெளியிட்டுள்ள முதல் புரமோஷன் வீடியோவிலேயே கதிர் - முல்லை காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், முல்லை மாஸ்க் அணிந்தபடி உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருக்கிறார். அவருக்கு தேவையான உதவிகளை செய்து அருகில் இருந்து கவனித்துக் கொள்கிறார் கதிர். மேலும் அதில் இருவருக்குமான காதல் நிறைந்த ரொமான்ஸ் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.3 மாதங்களுக்கும் மேலாக பழைய எபிசோட்கள் பார்த்து வந்த ரசிகர்களுக்கு புதிய கதை சொல்ல தயாராகி விட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.
First published: July 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading