Home /News /entertainment /

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் அசிங்கப்படும் மீனா.. தலையில் அடித்துக் கொள்ளும் ஜீவா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் கடையில் அசிங்கப்படும் மீனா.. தலையில் அடித்துக் கொள்ளும் ஜீவா!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் மீனா கடைக்கு ஜம்முன்னு கிளம்பி செல்கிறார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அவசர புத்தியால் எல்லோரிடமும் அசிங்கப்பட்டு நிற்கிறார். கடைக்கு போகும்  மீனாவின் கதை  இன்றைய எபிசோடில் ஒளிப்பரப்பாகிறது.

    முல்லையும் கதிரும் வீட்டை விட்டு சென்றதில் இருந்து ஐஸ்வர்யா - மீனா சண்டை எல்லை மீறுகிறது. மூர்த்தியும் இந்த சண்டையால் கோபமடைகிறார். தனம் அண்ணி பலமுறை இருவருக்கும் அட்வைஸ் செய்து விட்டார். ஆனால் ஐஸ்வர்யா மீனா இருவரும் இதை கேட்பதாக இல்லை. கடைசியில் மீனா ஒரு முடிவை எடுக்கிறார். அதாவது, தனம் அண்ணி போலவே பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு போக போகிறேன் என்கிறார். மொத்த குடும்பத்திற்கும் அதிர்ச்சி.

    குக் வித் கோமாளி நிஜமான டைட்டில் வின்னர் இவர் தான்.. ஸ்ருதிக்கா சொன்ன உண்மை!

    ஐஸ்வர்யாவும் கண்ணனும் சிரிக்கிறார்கள். ஆனால் மீனா பிடிவாதமாக இருக்கிறார். கடைசியில் தனம் அதற்கு ஓகே சொல்கிறார். இன்றைய எபிசோடில் மீனா கடைக்கு ஜம்முன்னு கிளம்பி செல்கிறார். ஆனால் அங்கு வேலை  தலைக்கு மேல் கிடக்கிறது. மீனாவுக்கு  பில்லை வேகமாக போட தெரியவில்லை. இதனால் கடைக்கு வரும் கஸ்டமர்ஸ்  டென்ஷன் ஆகுகின்றனர். ஒவ்வொரு முறையும் ஜீவாவை கூப்பிட்டு டென்ஷன் தருகிறார். சரவணனுக்கும் மீனாவின் வேலை பிடிக்கவில்லை.

    உடல் எடையை குறைத்து கம்பேக் கொடுக்க போகும் ஆல்யா! அவருடன் நடிக்க தான் ஆசையாம்

    கடைக்கு வருபவர்கள்   பொருள் இருக்கும் இடத்தை கேட்டால் அதுவும்  மீனாவுக்கு தெரியவில்லை. பொருளை அடுக்கிறேன் என்ற பெயரில் கீழே மேலே கொட்டுகிறார். கடையில் வேலை செய்யும் அனைவரும் தனம் அண்ணி  போல் வராது என கூறுகின்றனர். இதனால் மீனாவின் முகம் மாறுகிறது. இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும், ஜீவா,  மீனாவை  முறைத்து விட்டு தலையில் அடித்துக் கொள்கிறார். வீட்டில் சொகுசாக இருந்த மீனாவுக்கு கடை வேலை முதல் நாளே  செட் ஆகவில்லை. இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது. அடுத்த நாளிலிருந்து மீனா நிச்சயம் கடை பக்கம் வரமாட்டார்  போல.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி