Home /News /entertainment /

விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா... என்ன காரணம்?

விஜய் டிவி நிகழ்ச்சியிலிருந்து விலகிய பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா... என்ன காரணம்?

வெங்கட்

வெங்கட்

தனது மகள் தேஜுவுடன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் டாடி’ நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். தற்போது திடீரென அவர்கள் அந்நிகழ்ச்சியை விட்டு விலகியிருக்கிறார்கள்.

    விஜய் டிவி-யின் பிரபல நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியிருக்கிறார் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா என்றழைக்கப்படும் வெங்கட் ரங்கநாதன்.

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.

    இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று சீரியல் நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார்.



     




    View this post on Instagram





     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    இவர் தனது மகள் தேஜுவுடன் விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘சூப்பர் டாடி’ நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். இந்நிலையில் தற்போது திடீரென அவர்கள் அந்நிகழ்ச்சியை விட்டு விலகியிருக்கிறார்கள். இதையறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் பிஸியாக உள்ளதால் தான் சூப்பர் டாடி நிகழ்ச்சியிலிருந்து வெங்கட் விலகியிருப்பதாகக் கூறப்படுகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Shalini C
    First published:

    Tags: TV Serial, TV show, Vijay tv

    அடுத்த செய்தி