தான் பட்ட கஷ்டம், வலி, வேதனை, எதிரிக்குக் கூட வரக் கூடாது என
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வெங்கட் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.
இதில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். சன் மியூஸிக்கில் தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கிய இவர், இன்று
சீரியல் நடிகராக ரசிகர்கள் மனதில் தனக்கென ஓரிடத்தைப் பிடித்துள்ளார்.
மேலும் படிக்க -
சவுந்தர்யாவின் மெகா திட்டத்தால் சூடுப்பிடிக்கும் பாரதி கண்ணம்மா
கடந்த வருடம் இதே நாட்களில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாராம் வெங்கட். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு நிறைய கஷ்டங்கள் அனுபவித்தாராம். அந்த நாட்களை நினைவுகூர்ந்த அவர் கொரோனா பாதிப்படைந்து ஒரு வருடம் கடந்து விட்டது. ரொம்ப வலி, படபடப்பு, ஸ்ட்ரெஸ் என எதுவுமே போகவில்லை. துரோகி, எதிரிக்கு கூட இது வரக்கூடாது என
இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.