விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இதில் ஜீவா ரோலில் நடித்து பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் தான் வெங்கட் ரங்கநாதன். 90ஸ் கிட்ஸுக்கு சன் மியூஸிக் வெங்கட் என்றால் உடனே தெரிந்து விடும். ஆங்கரிங்கில் தொடங்கிய அவரின் பயணம் இப்போது நடிகராக வளர்ந்து நிற்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவருடன் சேர்ந்து ஸ்டாலின், சுஜிதா, ஹேமா ராஜ்குமார், குமரன் தங்கராஜன், சரவண விக்ரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதனை சுருக்கமாக ‘ஆனந்தம்’ படத்தின் சீரியல் வெர்ஷன் எனச் சொல்லலாம்.
அண்ணன் - தம்பி மற்றும் கூட்டுக் குடும்ப வாழ்க்கையை மையப்படுத்திய இந்த சீரியலில் தற்போது வரை பலரின் உள்ளம் கவர்ந்த சீரியல் லிஸ்டில் உள்ளது. வெங்கட், இந்த சீரியல் மட்டுமில்லை, இதற்கு முன்பு சன் டிவி ‘ரோஜா’ சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார். பின்பு பல காரணங்களால் அந்த சீரியலில் இருந்து விலகினார். தற்போது விஜய் டிவியில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவரின் பிறந்த நாள் அண்மையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குழு செட்டில் கொண்டாடப்பட்டுள்ளது.
கோபியின் நிஜமுகத்தை தெரிந்து கொண்ட அந்த நபர்.. பாக்கியலட்சுமியில் அதிரடி ட்விஸ்ட்!
மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின், ஐஸ்வர்யா, மீனா என அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படத்தில் இணையத்தில் வைரலாக வருகிறது. செட்டில் இருக்கும் அனைவரும் ஜீவாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறி கேக் கொடுக்கின்றனர்.
இது இல்லாமல், ஜீவா தனது பிறந்த நாளை தனது குடும்பத்துடனும் சிறப்பாக கொண்டாடி உள்ளார். வீட்டிலே வெள்லை நிறத்தில் பலூன்களை பறக்கவிட்டு, சிம்பிளான கேக் வைத்து ஜீவாவின் மனைவியும் அவரது செல்ல மல்களும் அவருக்கு சர்ப்பிரைஸ் கொடுத்துள்ளனர். இந்த வீடியோவை ஜீவா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து மனைவி மற்றும் மகளுக்கு நன்றி கூறியுள்ளார். ரசிகர்களும் ஜீவாவுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளனர்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.