• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கலங்க வைத்த கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கலங்க வைத்த கண்ணன்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

குடும்பத்தினரை மட்டுமில்லை, ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறான்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஏற்கெனவே மீளா துயரத்தில் இருக்கும் நேரத்தில் கண்ணனின் முடிவு அனைவரையும் கலங்க வைத்துள்ளது.

    கடந்த 1 வாரமாக டிவி, சோஷியல் மீடியா என எந்த பக்கம் திரும்பினாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குறித்த பேச்சு தான். காரணம் சீரியலில் லட்சுமி அம்மா இறந்து விட்டார். அவரின் முகத்தை கடைசி வரை பார்க்காமல் கண்ணன் ஊருக்கு போயிவிட்டான். இந்த ஒன்லைனை வைத்து கொண்டு ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களை கட்டி போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குழு சீரியலில் அடுத்தடுத்த திருப்பங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதுவரை கூட்டு குடும்பம் பாச போரட்டாமாக போயி கொண்டிருந்த கதையில் இப்போது லட்சுமி அம்மாவின் மறைவு, கண்ணனின் கண்ணீர் என கதைக்களம் சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை மட்டுமில்லை, ஒட்டு மொத்த சீரியல் ரசிகர்களையும் கலங்க வைத்துவிடுகிறான்.

    நேற்றைய எபிசோட்டில் ஐஸ்வர்யா சொன்னதை கேட்டு தனது வீட்டுக்கு படையெடுக்கும் கண்ணன், லட்சுமி அம்மாவின் ஃபோட்டோவை  பார்த்து கதறி துடிக்கிறான். ஆனால் அவனை யாராலும் சமாதானம் செய்ய முடியவில்லை. மூர்த்தி சொல்லாமல் கண்ணனிடம் பேச கூடாது என்று ஒட்டு மொத்த குடும்பமும் அமைதியாக இருக்கிறது. கண்ணன் அழுது துடித்தப்படி தனக்கு மனதில் இருக்கும் அனைத்து கசப்புக்களையும் சோகத்தையும் போட்டு உடைக்கிறான். “ எங்க அம்மாவ கடைசி வர யாருமே பார்க்க விடல.. நான் என்ன அவ்வளவு பெரிய தப்பா செஞ்சிட்டேன்.. என் சூழ்நிலை அப்படி ஆயிடுச்சு” ன்னு கண்ணன் கதறி அழும் இடம் பார்ப்பவர்களை, தாய் பாசம் மிக்கவர்களை கண்டிப்பாக அழ வைத்து விடுகிறது. கண்ணனின் அனைத்து கேள்விகளுக்கும் யாரிடமும் பதில் இல்லை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அப்போது தான் பொறுமையின் சிகரமான தனம் அண்ணி பொங்கி வெடிக்கிறார். லட்சுமி அம்மாவின் இந்த மறைவுக்கு கண்ணன் தான் காரணம், கண்ணன் கல்யாணம் பண்ணததால் தான் அம்மா சோகத்தில் சாப்பிடாமல், மாத்திரை எடுக்காமல் இப்படி ஆகிவிட்டதாக தனம் கூறுகிறார். இதனால் கண்ணன் வருத்தத்தில் தலையை அடித்து கொள்கிறான். அப்போது கூட கண்ணனிடம் ஜீவா, மூர்த்தி, கதிர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. கடைசி வரை தனியாகவே அழுது துடித்த கண்ணனை தேற்றி ஐஸ்வர்யா வீட்டுக்கு அழைத்து செல்கிறாள். ஆனாலும் கண்ணனுக்கு மனசு ஆறவில்லை. அம்மாவை கடைசியாக ஒருமுறை கூட பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் கண்ணனை விட்டு அகலவில்லை. அந்த சோகத்தில் தான் கண்ணன் இந்த முடிவை எடுக்கிறான்.

    மறு நாளை காலை தன் அண்ணன்கள் வருவதற்கு முன்பே சுடுகாட்டிற்கு சென்று லட்சுமி அம்மாவுக்கு பால் ஊற்றி சடங்குகளை செய்கிறான். அதுமட்டுமில்லை முடி, மீசையை எடுத்து தனது கடமையை செய்கிறான். இதைப் பார்த்த ஒட்டு மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் கலங்கி போகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: