• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 3 அண்ணன்கள் இருந்தும் ரோட்டில் அனாதையாக நிற்கும் கண்ணன்.. சோகத்தில் மூர்த்தியின் குடும்பம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

3 அண்ணன்கள் இருந்தும் ரோட்டில் அனாதையாக நிற்கும் கண்ணன்.. சோகத்தில் மூர்த்தியின் குடும்பம்! பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்

கண்ணனும் ஐஸ்வர்யாவும் அழுகிட்டே மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.

  • Share this:
    கண்ணன் -ஐஸ்வர்யா திருமணத்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது.

    தனம் வளைக்காப்பு முடிந்து சந்தோஷமாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தியின் குடும்பத்தில் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தால் புயல் அடித்து ஓய்ந்த மாதிரி இருக்கு. அண்ணன்களின் செல்ல தம்பியான கண்ணன் இப்படி செய்வான்னு யாரும் எதிர்பார்க்கல. நேத்து கல்யாணம் முடிச்சிட்டு வீட்டுக்கு வந்த கண்ணனை பார்த்து கோபத்தில் கத்திய மூர்த்தி கண்ணனுக்கு இனி மூர்த்தியின் குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று தலை முழுகினார். இதைப் பார்த்து மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் நிற்க கண்ணனும் ஐஸ்வர்யாவும் அழுகிட்டே மூர்த்தியிடம் மன்னிப்பு கேட்கின்றனர்.

    இந்நிலையில் இன்றைய எபிசோடில் மூர்த்தி கதவை மூடி கண்ணனை வெளியே துரத்துகிறார். ஒருவேளை கண்ணன் இந்த வீட்டுக்குள் வந்தால் நான் வெளியே சென்றுவிடுவேன் எனவும் மிரட்டுகிறார். அப்போது ஐஸ்வர்யா கண்ணனை “மாமா வாங்க போலாம்” அப்படின்னு கூப்பிட அவ்வளவு தான் கஸ்தூரி அத்தைக்கு கோபம் தலைக்கு ஏறி ஐஸ்வர்யாவை திட்டுகிறார். மூர்த்தி குடும்பம் கதவை மூடிக் கொண்டு உள்ளே செல்கிறது. கண்ணனும் கல்யாண கோலத்திலேயே ரோட்டை நோக்கி நடக்கிறான். பாவம் எங்கே போவதுன்னு கூட அவர்களுக்கு தெரியல.

    also read.. பிரபல ஹிட் சீரியலுக்கு விரைவில் என்டு கார்டு போடப்போகும் விஜய் டிவி

    வீட்டுக்குள்ளே சென்ற மூர்த்தி கண்ணனிடம் இனி யாரையும் பேச கூடாது என்று கட்டளையிடுகிறார். அந்த நேரம் பார்த்து குட்டி அண்ணி மீனா கண்ணனுக்கு ஆதரவாக பேசி மாமியாரிடம் திட்டு வாங்குகிறார். மூர்த்தியும் மீனாவை முறைக்கிறார். ”இனிமே எனக்கு 3 பிள்ளைகள் 3 மருமகள்கள் தான்.. ”கண்ணா என்ன உள்ளே கூடிட்டு போன்னு” பழக்க தோஷத்தில் மூர்த்தியின் அம்மா சொல்ல இளைய மகன் கதிர் அம்மாவை ரூமூக்கு கூடிட்டு போறான். அங்க போய் திரும்பவும் கண்ணன் தங்களுக்கு செய்த துரோகத்தை எண்ணி மூவரும் அழுகின்றனர். கண்ணன் கல்யாணம் பண்ணிகிட்டது கூட பிரச்சனை இல்லையாம். அவனுக்கு கல்யாண வயசு வரலையாம் அதான் பிரச்சனையாம்.



    நடு ரோட்டில் நிற்கும் கண்ணனுக்கு நண்பர்கள் மீண்டும் உதவி செய்கிறார்கள். ஐஸ்வர்யாவையும் கண்ணனையும் ஒரு வீட்டில் தற்சமயத்தில் தங்க வைக்க முயற்சி செய்கின்றனர். இந்த பக்கம் தனம் அண்ணியின் அம்மா, மொத்த குடும்பத்தையும் சாப்பிட கூப்பிடுகிறார். கண்ணன் போன சோகத்தை எண்ணி ஒரு பக்க தனம் தேம்பி தேம்பி அழுகிறாள். அவளை திட்டிக்கொண்டே நம்ம வீட்டுக்கு வா போலாம்ன்னு அவங்க அம்மா கூபிடுறாங்க. சத்தத்தைக் கேட்டு வந்த மூர்த்தி தனத்தை திட்டி சாப்பிட அழைக்கிறார். இனிமே யாரும் கண்ணனை நினைத்து வருத்தப்பட கூடாதுன்னு சொல்லி எல்லோரையும் சாப்பிட கூப்பிடுகிறார். சந்தோஷமாஇருந்த மூர்த்தியின் குடும்பத்தில் இப்படியொரு சோகம் பாவம்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: