ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

பிரச்னை வந்தா மருத்துவரை உடனே பாருங்க - மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

பிரச்னை வந்தா மருத்துவரை உடனே பாருங்க - மருத்துவமனையிலிருந்து வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா

மருத்துவரை பார்க்காமல் தவிர்த்ததாகவும் அறுவை சிகிச்சை ஏற்பட்ட பகுதியில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரை சென்று பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ரசிகர்களிடையே மிக பிரபலம். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த தொடரில் நடிக்கும் பிரபலங்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அதிக அளவு பின்தொடர்ந்துவருகிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸில் மீனா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துவருபவர் ஹேமா. இவர் அன்றாடம் தன் வாழ்க்கையில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வீடியோவாக பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு வீடியோவை பகிர்ந்து ஏதாவது பிரச்னை என்றால் உடனே மருத்துவமனைக்கு சென்று ஆலோசனை பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் மருத்துவமனையில் இருப்பதாக தெரிவித்த அவர் சில மாதகங்களுக்கு முன் மார்பகத்தில் ஏற்பட்ட  கட்டிக்காக அறுவை சிகிச்சை நடந்ததாகவும் பின்னர் 3 மாதங்களுக்கு பிறகு மருத்துவரை பார்க்கவேண்டி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் மருத்துவரை பார்க்காமல் தவிர்த்ததாகவும் அறுவை சிகிச்சை ஏற்பட்ட பகுதியில் வலி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவரை சென்று பார்த்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

' isDesktop="true" id="877005" youtubeid="E-I-F0aV-rE" category="television">

ஹார்மோன் பிரச்னை காரணமாகவே வலி ஏற்பட்டுள்ளதாகவும் பயப்பட ஒன்றும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் பிரச்னை ஏற்பட்டால் உடனே மருத்துவரை சென்று பார்க்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

First published: