• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தப்பை உணர்ந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

தப்பை உணர்ந்து மீனாவிடம் மன்னிப்பு கேட்டது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருக்க தற்போது குடும்ப பிரச்சனை தலை தூக்க தொடங்கி விட்டது

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று எந்த தப்பும் செய்யாத மீனாவிடம் ஒட்டு மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் மன்னிப்பு கேட்கிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தில் தொடங்கி லட்சுமி அம்மாவின் மரணம் வரை பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் செண்டிமெண்ட் காட்சிகளால் நிறைந்திருக்க, தற்போது குடும்ப பிரச்சனை தலை தூக்க தொடங்கி விட்டது. தற்போதைய நிலவரப்படி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மொத்த நபர்களும் தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் உள்ளனர். மொத்த குடும்பமும் தனத்தின் குழந்தைக்கு முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவா, கதிர், மூர்த்தி எல்லோரும் எப்போதுமே தனத்தின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதாக இருப்பதால் அடிக்கடி வீட்டில் சண்டை போடுகிறார் மீனா. அதே நேரம் மீனா எவ்வளவு சண்டை போட்டாலும் யாருமே அவரை அழ வைத்ததில்லை.

    ஆனால் முதல் முறையாக நேற்றைய தினம், தனத்தின் அம்மா மீனாவை சரமாரியாக திட்டி விடுகிறார். இதனால் மீனா மனமுடைந்து அழுது விடுகிறார். தனமும் அவரின் அம்மாவை திட்டி விடுகிறார். இருந்தாலும் கூட யாருக்குமே மீனா குழந்தையை எதற்காக தூக்கி சென்றார் என்பது தெரியாது. மீனாவின் அப்பா - அம்மாவும் வருத்தத்துடன் நேற்று வீட்டுக்கு திரும்பினார். மீனா அழுதது ஜீவாவுக்கு மட்டுமில்லை, கதிர், முல்லைக்கும் கஷ்டமாக இருந்தது.

    இன்றைய எபிசோடும் அதன் தொடர்ச்சியாக் ஒளிப்பரப்பாகிறது. கதிரும் முல்லையும், ரூமில் இன்று வீட்டில் நடந்த பிரச்சனை பற்றி கலந்து பேசுகின்றனர். மீனா சரியாகி விட்டாரா? என கதிர், முல்லையிடம் கேட்டறிந்தார். மீனாவிடம் இருக்கும் நல்ல குணமே எவ்வளவு சண்டை வந்தாலும் அதை உடனே மறந்து விட்டு சகஜமாக பேசுவார் என விட்டு கொடுக்காமல சொல்கிறார் முல்லை. இந்த பக்கம் ஜீவா முதன் முறையாக மீனா பக்கம் நின்று, ஆறுதல் கூறுகிறார். தப்பு செய்யாத மீனாவை தனத்தின் அம்மா திட்டியது தவறு என்று ஜீவா சொல்வது மீனாவுக்கே ஆச்சரியத்தை தருகிறது.

    விமான நிலையத்தில் நடந்தது என்ன? - விஜய் சேதுபதி விளக்கம்

    அழுது மனம் உடைந்து இருந்த மீனாவை, ஜீவா அன்பால் தேற்றி தூங்க வைத்தார். மறுநாள் காலை தனம், மூர்த்தி, கதிர், என ஒவ்வொருத்தராக மீனாவிடம் மன்னிப்பு கேட்டனர். மீனா மீது தப்பு இல்லை என்றும் அடித்து கூறினர். அதாவது, மீனா கண்ணனுக்காக தான் குழந்தையை தூக்கி சென்றது ஜீவா மூலம் எல்லோருக்கும் தெரிய வ்ர, அனைவரும் மீனாவிடம் மன்னிப்பு கேட்டனர். இந்த பக்கம், மீனா திட்டு வாங்க, கண்ணன் தான் காரணம் என தெரிந்துக் கொண்ட மீனாவின் அப்பா, கடைக்கு சென்று எல்லா கோபத்தையும் கண்ணன் மீது காட்டுகிறார். மீனா வீட்டில் மாட்டிக் கொண்டதையும் கண்ணனிடம் சொல்கிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: