• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியன் ஸ்டோர்ஸ்: என்னங்க சார் உங்க சட்டம்? கண்ணன் காதலுக்கு எதிர்ப்பு தமிழ் காதலுக்கு உதவியா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்: என்னங்க சார் உங்க சட்டம்? கண்ணன் காதலுக்கு எதிர்ப்பு தமிழ் காதலுக்கு உதவியா?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் கண்ணனின் காதலுக்கு நோ சொன்ன குடும்பம், தமிழின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டுவது எப்படி நியாயம்?

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மெகா சங்கமம் சோதனைகள் இந்த வாரமும் தொடர்கிறது. இதில் தமிழ் - சரஸ்வதி காதலுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸின் மொத்த குடும்பமும் தூது போகிறது.

    விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய மிகக் குறைந்த நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம்பிடித்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆனந்தம் திரைப்படத்தின் கதையை சீரியலாக காப்பியடித்து எடுத்துள்ளார்கள் என்று பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே சீரியல் மிகப்பெரிய வெற்றியை பெற்று தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. சமீபகாலமாக பாண்டியன் ஸ்டோர் சீரியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கண்ணன் கல்யாணம் தொடங்கி, லட்சுமி அம்மா மரணம், தனத்துக்கு ஆண் குழந்தை பிறந்தது என ஏகப்பட்ட ட்விஸ்டுகளுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

    இந்நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் மெகா சங்கமம் அரங்கேறி வருகிறது. சென்னைக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்செயலாக தமிழின் குடும்பத்தை சந்திக்க கடைசியில் அவர்களுடனே மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.

    திருமணம் குறித்த கேள்விக்கு சிம்பு சொன்ன க்யூட் பதில்...!

    இதுபோக சரஸ்வதியின் குடும்பம், மூர்த்தியின் குடும்பத்துக்கு நெருங்கிய சொந்தம் வேற. இந்நிலையில் தான் சரஸ்வதிக்கும் தமிழுக்கும் இடையே இருக்கும் காதல் பற்றி பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் 3 மருமகள்களுக்கும் தெரிய வந்தது. இதில் மீனா, தமிழின் காதலுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி தருகிறார். இதுக்குறித்த புரமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, தமிழின் காதலுக்காக சரஸ்வதி பற்றி மீனா, முல்லை, தனம் ஆகியோர் கோதை அம்மாவிடம் பேசுகின்றனர்.



    ஆனால், கோதை அம்மா அழகு, குணம், பணம் இது எல்லாவற்றையும் விட படிப்பு தான் முக்கியம் என்கிறார். அதுதானே பிரச்சனை. சரஸ்வதி இன்னும் 12 ஆவது கூட பாஸ் ஆகவில்லை. படித்த மருமகளை தேடும் கோதை அம்மாவுக்கு எப்படி சரஸ்வதி மருமகள் ஆவார் என்பது சந்தேகம் தான். இந்நிலையில் புரமோவை பார்த்த ரசிகர்கள் வழக்கம் போல், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை கலாய்த்து உள்ளனர். அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் கண்ணனின் காதலுக்கு நோ சொன்ன குடும்பம், தமிழின் காதலுக்கு கிரீன் சிக்னல் காட்டுவது எப்படி நியாயம்?என்கின்றனர்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: