Home /News /entertainment /

மீண்டும் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனாவால் வெடிக்கும் பிரச்சனை!

மீண்டும் பிரியும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. மீனாவால் வெடிக்கும் பிரச்சனை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்திடம் ஐஸ்வர்யா பணம் கேட்பது மூர்த்தி, மீனாவுக்கு பிடிக்கவில்லை.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் மீண்டும் ரூ. 50000 பணத்திற்காக சண்டை வெடிக்கிறது. இந்த முறை மீனாவும் ஐஸ்வர்யாவும் சண்டை போட்டு கொள்ள தனம் கதறி அழுகிறார். இன்னொரு முறை குடும்பம் பிரிந்து விடுமோ என்பதே அவரின் கவலை.

    கூட்டு குடும்பமாக வாழ்ந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்போது இரண்டாக பிரிந்து விட்டது. முல்லையின் ஆஸ்பிட்டல் செலவுக்கு மொத்தம்  5 லட்சம் செலவானது. இதை மூர்த்தி தான் பார்த்து கொண்டார். இந்த விஷயத்தை சுட்டி காட்டி ரூ. 50000 பணத்திற்காக மீனாவின் அப்பா மிகப் பெரிய சண்டை போட அதில் வெறுத்து போய் வீட்டை விட்டு சென்று விட்டார் கதிர். இப்போது கதிரும் முல்லையும் தனியாக வசித்து வருகிறார்கள். இந்த அதிர்ச்சியில் நெஞ்சு வலி வந்து மூர்த்தி வீட்டில் படுத்து விட்டார். இப்போது தனம் தான் எல்லா பொறுப்பையும் பார்த்து கொள்கிறார்.

    குழந்தை பிறந்த 1 மாதத்தில் ஷாக் கொடுத்த சூர்யா பட நடிகை!

    இங்கு கதிர் சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்யவில்லை ஹோட்டலில் தான் வேலை செய்கிறார் என்பது முல்லைக்கு தெரிந்து விட்டது. இன்றைய எபிசோடில் பொய் சொன்னதுக்காக கதிரிடம் சண்டை போடுகிறார் முல்லை. பின்பு இருவரும் சமாதானம் ஆகி விடுகின்றனர். எல்லா வேலையும் சமம் தான் என்று ஏற்றுக் கொள்கிறார் முல்லை. குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த இவர்கள் ஒற்றுமையாக இருக்க, அங்கு மூர்த்தி குடும்பத்தில் தினம் தினம் புது பிரச்சனை.

    நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்: முதல் சீசனாக விரைவில் நெட் ஃப்ளிக்ஸில் வெளியாகிறது!

    கண்ணனுக்கு அரசு வேலை வாங்க ரூ. 50000 முன்பணம் கட்ட வேண்டும் என ஒருவர் சொல்கிறார். அதற்கு தனத்திடம் பணம் கேட்கிறார் ஐஸ்வர்யா. இது மீனாவுக்கு பிடிக்கவில்லை. ஐஸ்வர்யா, கண்ணன் நல்ல வேலைக்கு செல்ல வேண்டும் என நினைக்கிறார். அந்த காரணம் தனத்திற்கு புரிகிறது. ஆனால் இந்த சூழ்நிலையில் ஐஸ்வர்யா பணம் கேட்பது மூர்த்தி, மீனாவுக்கு பிடிக்கவில்லை. குறிப்பாக மீனா இதை வைத்து ஐஸ்வர்யாவிடம் சண்டை போட பிரச்சனை வெடிக்கிறது.

    தனத்துக்கு இருவரையும் எப்படி சமாதானம் செய்வது என்று தெரியவில்லை. இருவரின் சண்டையால் மீண்டும் குடும்பம் பிரிந்து விடுமோ என பயந்து அழுகிறார். மீனா - ஐஸ்வர்யா இருவரும் மாறி மாறி சண்டை போட்டு கொள்கின்றனர். இதோடு இன்றைய எபிசோடு முடிகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, Television, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி