Home /News /entertainment /

வீட்டை விட்டு வெளியே போன கதிர்... பிரிந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

வீட்டை விட்டு வெளியே போன கதிர்... பிரிந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோடில் முல்லை - கதிர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் அதிரடி புரமோ ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. கூட்டு குடும்பத்தில் இருந்து பிரிந்து தனியாக செல்கிறார் கதிர்.

    விஜய் டிவி ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் குடும்பங்கள் கொண்டாடும் சீரியலாக உள்ளது. கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையை சொல்லும் இந்த சீரியலுக்கு பெரும் வரவேற்பு உள்ளது. குடும்பத்தின் பலமே ஒற்றுமை தான் என வளரும் 4 அண்ணன் - தம்பிகளின் கதை தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். பெரிய அண்ணனான மூர்த்தி, தனது தம்பிகளான ஜீவா, கதிர், கண்ணனை கஷ்டப்பட்டு வளர்க்கிறார். அவர்களுக்கு தாயாகவும், அண்ணியாகவும் இருக்கிறார் மூர்த்தியின் மனைவி தனம். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இவர்களுக்குள் பிரிவினை கிடையாது.

    ’தென்றல் வந்து என்னை தொடும்’ சீரியல் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்பிரைஸ்!

    இந்த குடும்பத்தை பிரிக்க இதுவரை பலரும் முயற்சித்து இருக்கிறார்கள். எத்தனையோ பிரச்சனையும் வந்து இருக்கிறது. ஆனால் இதுவரை அண்ணன் - தம்பிகளின் ஒற்றுமை பிரிந்தது இல்லை. இப்படி இருக்கையில் தற்போது வெளியாகி இருக்கும் புரமோவில் கதிர் வீட்டை விட்டுவெளியே போகிறார். வீட்டில் மிகப் பெரிய பிரச்சனை வெடிக்கிறது. ஒற்றுமைக்கு பெயர் போன பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ரெண்டாகிறது.

    கல்யாண விஷயத்தில் அவளை ஏமாத்திட்டாங்க.. பிரபல சீரியல் நடிகைக்காக கண்ணீர் விட்டு கதறிய ஸ்ரீநிதி!

    இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் மீனாவின் அப்பா ஜனார்த்தன். முல்லையின்  மருத்துவ செலவுக்கு மூர்த்தி கடன் வாங்கி இருந்தார். அந்த வட்டி பணத்தை வாங்க வந்தவர் வீட்டுக்கு முன்பு நின்று சண்டை போடுகிறார். உடனே ஜீவா அவரின் வாயை மூட, மீனாவிடம் இருந்து பணத்தை வாங்கி வந்து கடன் கொடுத்தவரிடம் கொடுக்கிறார். இதை மீனா அப்பா பார்த்து விடுகிறார். அவ்வளவு தான், அவர் முல்லை மற்றும் கதிரை பற்றி தப்பு தப்பாக பேசம் சண்டை வெடிக்கிறது.



    உடனே, கதிரின் மாமியார் கதிர் - முல்லைக்கு சப்போர்ட்டாக பேசுகிறார். இதனால் அவர்களுக்குள் சண்டை பெருசாகிறது. சண்டையை நிறுத்த தனம் தன் வளையலை கழட்டி கொடுக்க, தனத்தின் அம்மாவும் அண்ணனனும் சண்டை  போடுகின்றனர். இப்படி ஒவ்வொருவராக பேச வீட்டில் பெரிய சண்டை வெடிக்கிறது. கடைசியில் கதிர், முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார். எல்லோரும் கதறி அழுகிறார்கள். இன்றைய எபிசோடில் முல்லை - கதிர் வீட்டை விட்டு வெளியேறும் காட்சிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி