• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • Pandian Stores: சிங்கராக மாறிய கதிர் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

Pandian Stores: சிங்கராக மாறிய கதிர் - வைரலாகும் இன்ஸ்டா வீடியோ!

குமரன் தங்கராஜன்

குமரன் தங்கராஜன்

நடிப்பில அசத்துகிறார் என்றால், பாட்டும் சூப்பராக பாடுகிறாரே என குமரனுக்கு லைக்குகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
பாண்டியன் ஸ்டோர்ஸில் கதிராக அசத்தும் குமரன் தங்கராஜ், பாடகராகவும் மாறியுள்ளார்.

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கதிராக நடித்து வருகிறார் குமரன் தங்கராஜ். சீரியலில் ஸ்டார் பர்ஃபாமராக இருக்கும் அவர், தற்போது சிங்கராகவும் மாறியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது, மனதுக்கு நெருக்கமான பாடல்களை பதிவேற்றி வருகிறார். அந்தவகையில், சூர்யா நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘வாரணம் ஆயிரம்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை லேட்டஸ்டாக பாடி, இன்ஸ்டாவில் பதிவேற்றியுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.




நடிப்பில அசத்துகிறார் என்றால், பாட்டும் சூப்பராக பாடுகிறாரே என குமரனுக்கு லைக்குகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இதற்கு முன்பு சங்கமம் திரைப்படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் இடம் பெற்ற ‘முதல் முறை’ என்ற பாடலை மனமுருகி பாடியிருந்தார். பாடலைக் கடந்து, குமரன் நன்றாக நடனமாடக்கூடியவர். மானாட மயிலாட 4 மற்றும் 5 வது சீசன்களில் பங்கேற்ற அவர், உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

பின்னர், சீரியல்களில் களமிறங்கிய அவர், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். ஈரமான ரோஜாவே, மாப்பிள்ளை ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸில் அண்ணன் - தம்பிகளுள் ஒருவராக கதிர் கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடையே பக்கவாக ரீச்சாகியுள்ளார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - ஐஸ்வர்யா திருமணத்தை மையப்படுத்தியே நகர்ந்து கொண்டிருக்கிறது.

கடைசி தம்பியான கண்ணனும், ஐஸ்வர்யாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். திடீரென ஐஸ்வர்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதால், அதிர்ச்சியான இருவரும் வீட்டுக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று திருமணம் செய்து கொள்கின்றனர். இதனையறிந்த கண்ணனுடைய அண்ணன்கள் அவர்கள் மீது கடுமையாக கோபப்படுகின்றனர். வீட்டிலும் சேர்காததால் எங்கு செல்வதென தெரியாமல் நடுரோட்டில் நிற்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

Also read... இந்த வார டிஆர்பி ரேட்டிங் வெளியானது - முதல் 5 இடங்களை பிடித்த முக்கிய சீரியல்!

இந்தநிலையில், கதிரின் மனைவியான முல்லை, வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் கண்ணன் - ஐஸ்வர்யாவுக்கு உதவி செய்கிறாள். முல்லையின் வீட்டிற்கு செல்லும் கண்ணனும், ஐஸ்வர்யாவும் சாப்பிட்டு அங்கேயே தங்குகின்றனர். கோபமாக இருந்தாலும் அண்ணன்கள் கதிர் மற்றும் ஜீவா புலம்பிக்கொண்டிருக்கின்றனர். அப்போது, தங்கள் வீட்டில் இருவரும் தங்கவைக்கப்பட்டிருப்பதை முல்லை கூறுவதைக் கேட்டு மகிழ்ச்சியடையும் கதிர், முல்லையை பாராட்டுகிறான். மேலும், கண்ணன் முல்லை வீட்டில் இருப்பதை ஜீவாவிடம் சொல்ல, அவனும் மகிழ்ச்சியடைகிறான். இந்த விஷயம் மூத்த அண்ணன் மூர்த்திக்கு தெரியாது. கண்ணன் - ஐஸ்வர்யா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். ஒருவேளை முல்லை அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது தெரிந்தால் என்ன நடக்கப்போகிறதோ? என்பது அடுத்த டிவிஸ்ட் என்பதால் ரசிகர்கள் அடுத்து என்ன நடக்க போகிறது? என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: