• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பாண்டியஸ் ஸ்டோர்ஸை கலாய்த்த ஐஸ்வர்யா! பாதியிலேயே துரத்தி விட்ட கோபம் இருக்காதா என்ன?

பாண்டியஸ் ஸ்டோர்ஸை கலாய்த்த ஐஸ்வர்யா! பாதியிலேயே துரத்தி விட்ட கோபம் இருக்காதா என்ன?

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

வீட்டை விட்டு வெளியே துரத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வச்சு செய்கிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைசி மருமகள் ஐஸ்வர்யாவின் அட்ராசிட்டி மொத்த குடும்பத்தையும் புரட்டி போட்டுள்ளது.

    விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல், அண்ணன், தம்பி பாசத்தை கதைக்களமாக கொண்டுள்ளது. ஒரு சராசரி குடும்பத்தில் நடக்கும் அன்றாட நிகழ்வுகள், பாச காட்சிகள், சின்ன சின்ன சண்டைகள், நகைச்சுவைகள் உள்ளிட்டவை மிக சுவாரசியமாக காட்டப்பட்டு வருவதால் ரசிகர்களின் அமோக ஆதரவை இந்த சீரியல் பெற்றுள்ளது.பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் கடைக்குட்டி கண்ணன், ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டதால் மொத்த குடும்பமும் அவனை வெறுத்து ஒதுக்கினார்கள். அதோடு வீட்டை விட்டும் வெளியேற்றினார்கள்.

    கண்ணனின் திருமணம் குறித்து வருத்தத்தில் இருந்த லட்சுமி அம்மாவும் சமீபத்தில் இறந்துவிட்டார்.இதனால் கண்ணன் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை விட்டு நீண்ட தூரம் சென்றது போல் நிலைமை மாறியது. இவர்களுக்கு இடையில் இருக்கும் பிரிவை மேலும் விரிசல் செய்ய கஸ்தூரி அத்தாச்சி மல்லிகாவுடன் சேர்ந்து ஒரு பிளானை போடுகிறார். அதன்படி மூர்த்தி வீட்டுக்கு எதிரே கண்ணனையும் ஐஸ்வர்யாவையும் குடி வைக்கிறார். இது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாது.

    ஆனால், கஸ்தூரி அத்தாச்சியின் திட்டத்தை சிறப்பாக புரிந்து கொண்ட ஐஸ்வர்யா, வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார். வீட்டுக்கு எதிரே குடி வந்ததில் இருந்து குடும்பத்தில் இருக்கும் அனைவரிடமும் பேச முயற்சிப்பது, அவர்களை வம்புக்கு இழுப்பது என பயங்கர அட்ராசிட்டி செய்து வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோடில் ஒருபடி மேலே போய் மூத்த அண்ணன் மூர்த்தியை வச்சி செய்து விடுகிறார் ஐஸ்வர்யா. கண்ணனுக்கு பயம் இருந்தாலும் ஐஸ்வர்யாவின் பேச்சால் மூர்த்தியால் பதிலே பேச முடியவில்லை.



    காலையில் வாசலில் மூர்த்தியும், கதிரும் பேசி கொண்டிருந்த டீ டம்ளரை எடுத்துக் கொண்டு வந்த ஐஸ்வர்யா, பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் போடும் டீ கசாயம் போல் இருக்கும் என்று வெறுப்பேத்துகிறார். மூர்த்தியை டீ குடிக்க சொல்லியும் கேட்கிறார்.ஐஸ்வர்யாவின் கேலி, கிண்டலை கண்ட மீனாவும், கதிரும் ஷாக்கில் அப்படியே நிற்கிறார்கள். கண்ணனை திருமணம் செய்த நாளில் இருந்து வீட்டை விட்டு வெளியே துரத்திய பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் வச்சு செய்கிறார் ஐஸ்வர்யா.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: