• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • இறப்பதற்கு முன்பு தனத்திடம் லட்சுமி அம்மா சொன்ன உண்மை!

இறப்பதற்கு முன்பு தனத்திடம் லட்சுமி அம்மா சொன்ன உண்மை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனது சாவை பற்றி முன்பே அறிந்த லட்சுமி அம்மா, அன்று இரவு இதுப்பற்றி தனத்திடம் பேசி இருக்கிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் லட்சுமி அம்மா இறப்பதற்கு முன்பு ஒரு உண்மையை தனத்திடம் சொல்லிவிட்டு சென்றுள்ளார்.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று ஒளிப்பரப்பாகவுள்ள எபிசோடு குறித்து பார்க்கலாம். டி.ஆர்.பியில் முதலிடத்தில் உள்ள இந்த சீரியலில் லட்சுமி அம்மா மறைவு எபிசோடுகள் ரசிகர்களை அழக வைத்துவிட்டது. தொடர்ச்சியாக அவரின் மறைவுக்கு அனைத்து சடங்குகளும் முறைப்படி 4 பிள்ளைகளால்  நடத்தப்படுவதாக காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நேற்றைய தினம் கண்ணன் மொட்டை அடித்து கொண்டு லட்சுமி அம்மாவுக்கு இறுதி சடங்குகளை செய்தான். அப்போது லட்சுமி அம்மாவின் அஸ்தியை வாங்க வந்த மூர்த்தி, கதிர், ஜீவா ஆகியோர் கண்ணனை பார்த்து கண்கலங்கி நிற்கின்றனர். அவர்களிடம் பாசம் இருந்தாலும் அதை வெளிக்காட்ட முடியாத சூழ்நிலையில் உடைந்து நிற்கிறார்கள்.

    அப்போது லட்சுமி அம்மாவின் ஆஸ்தியை மூர்த்தி வாங்கி கொள்கிறார். அவரால் கண்ணனிடம் பேச முடியவில்லை ஆனாலும் கண்ணன் படும் கஷ்டத்தை பார்த்து, போக மனம் இல்லாமல் தவிக்கிறார். மீனா அப்பா, மூர்த்தியை கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து செல்கிறார். கண்ணன், அண்ணன்கள் தன்னை வெறுத்து ஒதுக்குவதை தாங்கி கொள்ள முடியாமல் துடிக்கிறான். லட்சுமி அம்மா மறைவில் இருந்து மீண்டு வர முடியாத தனம் ஃபோட்டோ முன்பு நின்று கண்கலங்குகிறாள். அப்போது தான் இறப்பதற்கு முன்பு லட்சுமி அம்மா, அவளிடம் சொன்ன எல்லா விஷயத்தையும் நினைவு கூர்கிறாள். குடும்பத்தை கட்டுக்கோப்பாக வழி நடத்த சொன்னது, கண்ணனை கைவிட வேண்டாம் என கேட்டது, எந்த நேரத்திலும் 4 அண்ணன் தம்பிகளும் பிரிந்து விட கூடாது என தனது சாவை பற்றி முன்பே அறிந்த லட்சுமி அம்மா, அன்று இரவு இதுப்பற்றி தனத்திடம் பேசி இருக்கிறார். இதையெல்லாம் தனம், மீனா மற்றும் முல்லையிடம் கூறி அழுகிறார்.

    பின்பு வீட்டுக்கு அஸ்தி வந்ததும் முறைப்படி எல்லோரும் அதை லட்சுமி அம்மா ஃபோட்டோ முன்னாடி வைத்து வழிப்படுகிறார்கள். அப்போது தான் முதன்முறையாக மூர்த்தி, லட்சுமி அம்மா அஸ்தியை கண்ணன் தொட்டு வணங்க அனுமதி தருகிறார். கண்ணனுக்கு முதன்முறையாக சந்தோஷம் வருகிறது. பின்பு 3 அண்ணன்களும் அதை கடலில் கரைக்கின்றனர். அப்போது கூட கண்ணன் தனியாக நின்று அம்மாவின் அஸ்தி கரைவதை பார்க்கிறான்.

    அண்ணன்கள் நம்மை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா? வாடா கண்ணா அப்படின்னு கூப்பிட மாட்டார்களா? என வெம்பி அழுகிறான். ஆனால் மூர்த்தி தனது முடிவில் அசராமல் இருக்கிறார். லட்சுமியின் தம்பிக்கு கண்ணனை பார்க்க மனசு பதறுகிறது. ஆனாலும் கல்யாணம் பண்ணது, தப்பு அதனால் தான் அக்கா இறந்தார் என்பதை எல்லோரும் சொல்வதால் மூர்த்தியை மீறி அவர் எதும் செய்ய முடியாது என்பதாலும் சிலை போல் நிற்கிறார். கண்ணன், தனது அண்ணன்களை பார்த்து ஏக்கத்துடன் நிற்கிறான். இதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: