'என் கணவருக்காக' முதல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் ‘ வரை... சின்னத்திரையின் வெற்றி நாயகி சுஜிதா!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா

pandian stores dhanam vijaytv serial : மாஸ்டர் படத்தின் மலையாள வெர்ஷனில் மாளவிகாவுக்கு சுஜிதா தான் டப்பிங் பேசி இருந்தார்

 • Share this:
  சின்னத்திரையில் 14 ஆண்டுகளை கடந்து வெற்றி பயணத்தில் இருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் உண்மையில் பலருக்கும் ஒரு ரோல்மாடல்.

  சின்னத்திரையில் மிக அதிக அளவு வரவேற்பை பெற்ற சீரியலில் ஒன்று விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ். 500 எபிசோடுகளை தாண்டி ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் இல்லத்தரசிகளின் ஆல் டைம் ஃபேவரெட்.

  கூட்டு குடும்பத்தில் ஒற்றுமையுடன் இருக்கும் நான்கு சகோதரர்கள், வீட்டுக்கு வந்த மருமகள்களால் நடக்கும் பிரச்சனைகள், அன்பு, பாசம் என பக்கா குடும்ப மசாலா நிறைந்தது. இதில் மூர்த்தியின் மனைவியாக, மூத்த மருமகளான தனம் அண்ணியாக நடித்து இருப்பவர்... இல்லை வாழ்ந்துகொண்டு இருப்பவர் நடிகை சுஜிதா. இவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்த கதாப்பாத்திரங்களில் ஒன்றாக அது இருந்து வருகிறது.

  Also Read : ரோஜா சீரியல் செய்த மற்றொரு சாதனை - ரசிகர்கள் கொண்டாட்டம்

  குழந்தை நட்சத்திரமாக 2 வயதில் திரையுலகத்திற்கு வந்த அவர்  30 ஆண்டுகளை கடந்துள்ளார். சின்னத்திரையில் மட்டுமே 14 ஆண்டுகளுக்கு மேலாக அவரின் பயணம் தொடர்கிறது. பாக்யராஜ் மற்றும் ஊர்வசி நடித்த முந்தானை முடிச்சு படத்தில் இருக்கும் குழந்தை நட்சத்திரம் இவர் தான். இதுப்போன்ற பல படங்கள் சத்யாரஜ் மகளாக, கார்த்திக் மகளாக பல படங்களில் நடித்துள்ளார். மலையாளம், தெலுங்கு படங்களிலும் இவரைப் பார்த்திருபீர்கள்.

  குடும்பத்தினருடன் சுஜிதா


  சன் டிவியில் ஒளிப்பரப்பான ‘என் கணவருக்காக’ தொடரை 90ஸ் கிட்ஸ் மறந்து இருக்கமாட்டீர்கள். அதில் சந்தியாவாக நடித்திருப்பார். பெரும் வரவேற்பை பெற்ற அந்த தொடருக்கு பின் சுஜிதாவுக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தான்.

  Also read : சின்னத்திரையில் ஒரு டாக்டர் நடிகை... நீதானே என் பொன்வசந்தம் லீட் ரோல் அனு!

  கேரளாவைச் சேர்ந்த சுஜிதா பல மலையாள படங்களுக்கு டப்பிங் பேசி இருக்கிறார் மாஸ்டர் படத்தின் மலையாள வெர்ஷனில் மாளவிகாவுக்கு சுஜிதா தான் டப்பிங் பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.இதுப்போன்ற எண்ணற்ற சாதனைகளுக்கு சொந்தக்காரரான சுஜிதா உண்மையில் பழகுவதற்கும் இனிமையானவர். இப்போது யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் தன்னை பற்றி ரசிகர்களுக்கு தெரியாத பல தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sreeja Sreeja
  First published: