Home /News /entertainment /

மீனா இல்லாமல் பொங்கல் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!

மீனா இல்லாமல் பொங்கல் கொண்டாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம்

சுட்டிப் பாப்பா கயலை வைத்து ஒரு சிறு வீடியோ ஒன்றை எடுத்து அதை, "கயல் பாப்பா பொங்கல்" என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

  • Last Updated :
    பொதுவாக சுட்டி குழந்தைகளின் நடிப்பு என்றாலே நம்மில் பலருக்கும் பிடித்ததாக இருக்கும். நமது வீட்டில் உள்ள சுட்டி குழந்தைகள் செய்யும் சேட்டைகளை பார்த்தாலே நமக்கு இருக்கும் மனக்கஷ்டம், வருத்தம் எல்லாமே பறந்து போய்விடும். அந்த அளவிற்கு குழந்தைகள் செய்யும் சேட்டைகள் நமது எண்ண ஓட்டத்தையே மாற்ற கூடியதாக இருக்கும். அதே போன்று, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கும் குழந்தைகளை பலருக்கும் பிடிக்கும். அவர்களின் குறும்புத் தனமான நடிப்பும், அழுகையும் பார்க்கின்ற நேயர்களுக்கு தனி அனுபவத்தை தரக்கூடும்.

    இப்படியொரு பிரபலமான சுட்டி குழந்தை கதாப்பாத்திரம் தான் விஜய் டிவியின் பிரபல சூப்பர் ஹிட் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வரும் கயல் பாப்பா. இந்த குட்டி பாப்பாவை சீரியலில் பல எபிசோடுகளில் நடித்துள்ளது. கயலின் அம்மாவான மீனா பார்த்து கொள்வதை விடவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் கயலை சிறப்பாக பார்த்து கொள்வது நம் எல்லோருக்கும் தெரிந்த ஒன்று தான். குறிப்பாக கயல் பாப்பாவின் பெரியம்மாவான தனம், கயலின் மீது அதீத அன்பு கொண்டவர். தன் குழந்தையை விடவும் கயலை எப்போதும் சிறப்பாக இவர் பார்த்து கொள்வார். இதனால் கூட சீரியலின் சில எபிசோடுகளில் தனத்தின் அம்மா அவரை திட்டி இருப்பார்.

    இதையும் படிங்க.. டிவி சேனல்களில் வரிசைக்கட்டி நிற்கும் புதுப்படங்கள்!

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கயல் பாப்பாவும் மற்றவர்களைப் போன்று முக்கியமான பாத்திரங்களில் ஒருவராக மாறி உள்ளார். அவரின் சின்ன சின்ன சேட்டைகளை மட்டுமே நாம் சீரியலில் பார்த்திருப்போம். கயல் பாப்பா இது போல பல குறும்புகளை செய்ய கூடியவர் என்று சொல்கிறார்கள். அதை நிரூபிக்கும் வகையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ வெளியானது.

    பொதுவாக பொங்கல் விழா தொடங்கினாலே விஜய் டிவியின் சீரியல்களின் சங்கமம் அல்லது கொண்டாட்டங்கள் என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இதையும் படிங்க.. டி.ஆர்.பியில் கலக்கும் சீரியல்.. திடீரென்று பிரேக் எடுத்த சின்னத்திரை நடிகை!

    அந்த வகையில் சுட்டிப் பாப்பா கயலை வைத்து ஒரு சிறு வீடியோ ஒன்றை எடுத்து அதை, "கயல் பாப்பா பொங்கல்" என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இதில் இந்த வீடியோவில் தனம் மிக அழகிய பட்டு புடவை ஒன்றை அணிந்துள்ளார். அதே போன்று கயல் பாப்பாவும் பாவாடை சட்டை அணிந்துள்ளார். பொங்கல் பாரம்பரியமான பண்டிகை என்பதால் இவர்கள் இருவரும் சேர்ந்து அடுப்பில் பொங்கலை வைத்து கொண்டாடுவது அந்த வீடியோவில் உள்ளன

    இன்ஸ்டாகிராம் வீடியோ லிங்க் இங்கே:



     
     

     

     


    View this post on Instagram


     

     

     

     

    A post shared by Tamil Serials (@tamilserialexpress)






    மேலும் இதில் கயல் பாப்பாவை ஹேப்பி பொங்கல் என்று சொல்ல சொல்லி தனம் கூறியுள்ளார். இதற்கு அவர் சிரித்து கொண்டே வாழ்த்துக்கள் கூறுவது போல் இருக்கிறது இந்த வீடியோவை பலர் இன்ஸ்டாகிராமில் பார்த்தும், கமென்ட் செய்தும் வருகின்றனர். அதே போன்று கயல் பாப்பா, தனம், பாண்டியன் ஸ்டோர்ஸ் பற்றிய கமெண்ட்கள் வந்த வண்ணம் உள்ளது. எது எப்படியோ, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியலாக உள்ள வரையில் கயல் பாப்பாவும் பிடித்தமான ஒருவராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி