• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • சீரியலில் வருவதற்கு முன்பே வைரலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் குழந்தை!

சீரியலில் வருவதற்கு முன்பே வைரலான பாண்டியன் ஸ்டோர்ஸ் தனத்தின் குழந்தை!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்தின் குழந்தை யார்? என்பது முன்பே எங்களுக்கு தெரியும் என்கின்றனர் ரசிகர்கள்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸில் தனத்துக்கு பிறக்கும் குழந்தையின் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

    கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மக்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது. நான்கு அன்ண்ணன் - தம்பிகள் கூட்டுக் குடும்பமாக வாழ்வதையும், அவர்கள் எதிர்கொள்ளும் சில சவால்கள் மற்றும் சங்கடமான சூழல்களை வைத்து கதைக்கரு அமைக்கப்படுள்ளது. கூட்டுக் குடும்பத்துக்கு வரவேற்பு இருக்கும் தமிழ்நாட்டில், இந்த சீரியலுக்கு ரசிகர்களும் நல்ல ஆதரவைக் கொடுத்துள்ளனர்.

    ஸ்டாலின், சுஜிதா, வெங்கட், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த சில வாரங்களாக சோகமும், கோபமும் நிறைந்த எபிசோடுகளாக சென்று கொண்டிருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் மீண்டும் மகிழ்ச்சியான மூடுக்கு திரும்பியுள்ளது. மூத்த அண்ணி தனத்தின் வளைக்காப்புக்கு பிறகு, தனத்தின் குழந்தை பிறப்பில் தான் இந்த சந்தோஷம் கூடியிருக்கிறது என்றும் சொல்லாம்.

    ஏனென்றால், கடைசி தம்பியான கண்ணன் வீட்டில் யாருக்கும் தெரிவிக்காமல் காதல் கல்யாணம் செய்து கொள்கிறான். அவன் செய்த திருமணம் வீட்டில் புயலைக் கிளப்புகிறது. ஏற்கனவே மற்றொருவருக்கு நிச்சயம் செய்து கொடுத்து, திருமணத்துக்கு தயாராக இருந்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு சென்று திருமணம் செய்ததால், கண்ணனின் குடும்பத்தினர் அவர்களை ஏற்கவில்லை. இதனால் கண்ணன் தம்பதி தனியாக வசித்து வந்தது. அந்த நேரத்தில், வேலையில்லாமல் கஷ்டப்படும் கண்ணன் ஒவ்வொரு கடையாக ஏறி இறங்கி வேலை தேடுகிறான். அப்போது, கிடைக்கும் டிரைவர் வேலைக்காக திருச்சி செல்லும்போது, கண்ணனின் தாய் இறந்துவிடுகிறார்.

    இந்த தகவல் கண்ணணுக்கு தெரியப்படுத்தி, அவன் வீடு திரும்புவதற்குள் கண்ணனின் தாயை அடக்கம் செய்கின்றனர். இது கண்ணனுக்கு தீராத வலியைக் கொடுக்கிறது. இப்படியாக சென்று கொண்டிருந்த கதைக்களத்தில், திடீரென கர்ப்பமாக இருக்கும் அண்ணி தனத்திற்கு, வயிற்று வலி ஏற்படுகிறது. கண்ணன், அண்ணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறான். அங்கு தனத்திற்கு ஆண் குழந்தை பிறக்கிறது. இதுவரை எபிசோட் ஒளிபரப்பாகி இருக்கும் நிலையில், சீரியலின் இயக்குநர் பிறந்தநாள் விழா பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடப்பட்டது. அப்போது, அனைவரும் குழுப் புகைப்படம் ஒன்றை எடுத்துக் கொண்டனர்.

    அதில், தனத்தின் குழந்தையாக காட்டப்பட உள்ள குழந்தையை ஹேமா வைத்திருக்கிறார். இதனைப் பார்த்த நெட்டிசன்கள், தனத்தின் குழந்தை யார் என்பது முன்பே எங்களுக்கு தெரியும் என, வழக்கமான சேட்டையுடன் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஆயுதபூஜையையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து கொண்டாடினர். அந்தப் புகைப்படமும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: