முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அடுத்தடுத்து கர்ப்பமாகும் மருமகள்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

அடுத்தடுத்து கர்ப்பமாகும் மருமகள்கள்... பாண்டியன் ஸ்டோர்ஸை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

வீட்டில் ஏற்கனவே இருவர் கர்ப்பமாக இருக்கும் போது, நாமும் இப்படி இருந்தால் நல்லாவா இருக்கும் என குழப்பமடைகிறார் தனம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்தடுத்து கர்ப்பமாகும் நிகழ்வு நடந்தேறி வருகிறது. விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டுக் குடும்பத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருகிறது. இதில் ஸ்டாலின், சுஜிதா தனுஷ், வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், லாவண்யா, குமரன் தங்கராஜன், சரவணன், சாய் காயத்ரி என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

திருமணமாகி பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாமல் இருந்த கதிர் - முல்லை ஜோடி, பல்வேறு சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டனர். ஆனால் அது எதுவும் கைகொடுக்கவில்லை. அதோடு முல்லைக்கு குழந்தையே பிறக்காது என கை விரித்தார் மருத்துவர். இதற்கிடையே சமீபத்தில் அவர் கர்ப்பமானது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அந்த சந்தோஷம் அடங்குவதற்குள் கடைக்குட்டி கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா கர்ப்பமானாள். நான்கு மருமகள்களில் இருவர் கர்ப்பமானதால், தனமும், மீனாவும் மட்டுமே எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது மூத்த மருமகள் தனம் இரண்டாவது முறை கர்ப்பமாகியிருப்பதாக ப்ரோமோ வெளியாகியிருக்கிறது. வீட்டில் ஏற்கனவே இருவர் கர்ப்பமாக இருக்கும் போது, நாமும் இப்படி இருந்தால் நல்லாவா இருக்கும் என குழப்பமடைகிறார் தனம். அதுவும் தான் தூக்கி வளர்த்த கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவும், தானும் ஒரே நேரத்தில் கர்ப்பமாக இருப்பதை தனம் சுத்தமாக விரும்பவில்லை. இந்த விஷயம் தனத்தின் அம்மாவுக்கும், மூர்த்திக்கும் மட்டுமே தெரியும்.

' isDesktop="true" id="890434" youtubeid="bV2O3vPf1NI" category="television">

வீட்டாரிடத்தில் அவர் எப்படி சொல்வார் அல்லது என்ன செய்வார் என்பதை அறிந்துக் கொள்ள ஆர்வத்துடன் இருக்கிறார்கள் ரசிகர்கள். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வரிசையாக அனைவரும் வாந்தி எடுத்து வருவதால், இதனை வாந்தி ஸ்டோர் எனவும் கர்ப்ப ஸ்டோர் எனவும் இணையத்தில் கிண்டல் செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Pandian Stores, TV Serial, Vijay tv