• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • 12 வருட போராட்டம்.. இன்று சீனியர் சின்னத்திரை நடிகராக உயர்ந்து நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி!

12 வருட போராட்டம்.. இன்று சீனியர் சின்னத்திரை நடிகராக உயர்ந்து நிற்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

பாண்டியன் ஸ்டோர்ஸ் மூர்த்தி

நெகட்டிவ் விமர்சனமோ, சர்ச்சையிலோ சிக்காமல் பாரதிராஜவின் பெயரை எல்லா இடத்திலும் காப்பாற்றி வருகிறார்.

  • Share this:
    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தியாக நடிக்கும் ஸ்டாலின் முத்து 12 வருடங்களாக சின்னத்திரையில் கடந்த வந்த பாதை இதோ.

    சின்னத்திரை வெள்ளித்திரை எதுவாக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டுமே நீடித்து இருக்க முடியும். அந்த வகையில் முழுக்க முழுக்க திறமையால் மட்டுமே கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரையில் காலூன்றி நின்று, இன்று சீனியர் சின்னத்திரை நடிகராக உயர்ந்துள்ளார் ஸ்டாலின் முத்து. இவரை பாண்டியன் ஸ்டோர்ஸ் மூத்த அண்ணன் மூர்த்தி என்றால் தான் பலருக்கும் தெரியும். தனக்கு கொடுக்கும் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் ஈஸியாக பெற்றுவிடும் தெற்கத்தி கலைஞர் தான் இந்த ஸ்டாலின் முத்து.

    இவர் இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் சொந்த அண்ணன் மகன். இவரின் தந்தை அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆனால் ஸ்டாலின் சித்தப்பாவை போலவே சினிமாவுக்கு வந்துவிட்டார். சினிமாவை தேர்ந்தெடுத்த நாளில் இருந்து 12 ஆண்டுகளுக்கு மேலாக இப்போது வரை எந்த இடத்திலும் நெகட்டிவ் விமர்சனமோ, சர்ச்சையிலோ சிக்காமல் பாரதிராஜவின் பெயரை எல்லா இடத்திலும் காப்பாற்றி வருகிறார். முதன்முறையாக கலைஞர் தொலைக்காட்சியில் பாரதிராஜா இயக்கத்தில் ஒளிபரப்பான தெற்கத்தி பொண்ணு சீரியல் தான் ஸ்டாலின் அறிமுகம். இந்த சீரியலில் லீட் ரோலில் நடித்தார்.



     




    Instagram இல் இந்த இடுகையை காட்டு





     

    Stalin Muthu இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@stalinmuthu27)






    அதன் பின்பு சன் டிவியில் பாச மலர், விஜய் டிவியில் சரவணன், மீனாட்சி, ஆண்டாள் அழகர், மாப்பிள்ளை, மதுரை என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார். 7சி சீரியலில் ஸ்டாலின் டீச்சராக நடித்திருந்தார். இவை எல்லாவற்றையும் விட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மூர்த்தி கதாபாத்திரம் இவருக்கு மிகப் பெரிய பெயரை வாங்கி தந்துள்ளது.இதற்காக விஜய் டிவி அவார்டையும் ஸ்டாலின் பெற்றுள்ளார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். சமீபத்தில் கூட இவரின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலானது.

    சீரியலில் மட்டுமில்லை நிஜத்திலும் பழகுவதற்கு மிகவும் எளிமையான மனிதர். இந்த சீரியலில் இவருடன் நடித்த விஜே சித்ரா இறந்த போது ஸ்டாலின் தலையில் அடித்து கொண்டு அழுத காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைத்தது. இவருடன் தனம் ரோலில் நடிக்கும் சுஜிதா, ஒருமுறை மிகச் சிறந்த மனிதர் ஸ்டாலின் பெண்களை மதிப்பவர் என பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: