• HOME
 • »
 • NEWS
 • »
 • entertainment
 • »
 • பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா... முதல் ஆளாக வந்த பிக் பாஸ் பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா... முதல் ஆளாக வந்த பிக் பாஸ் பிரபலம்!

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவி நட்சத்திரங்களும் இந்த வைபவத்தில் பங்கேற்பார்கள் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.

 • Share this:
  விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு வழியாக தற்போது வழக்கமான உற்சாக எபிசோட்களுக்கு திரும்பி இருக்கிறது.

  கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சகோதரர்களான மூர்த்தி, ஜீவா, கதிர் மற்றும் கண்ணன் ஆகியோரின் தாயான லட்சுமி அம்மா திடீரென இறந்து விடுவது போல காட்டப்பட்டது. இதற்கு காரணம் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இளைய வாரிசான கண்ணன், உறவுக்கார பெண் ஐஸ்வர்யாவை யாருக்கும் தெரியாமல் கோவிலில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாக காட்டப்பட்டது.

  சிறு குழந்தையாக கண்ணனை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்ப உறவுகள் நினைத்து கொண்டிருக்க, அவன் இப்படிப்பட்ட காரியத்தை எப்படி செய்தான் என்ற மீள முடியாத அதிர்ச்சியில் குடும்பத்தினர் இடிந்து போயினர். இதனால் மனமுடைந்த லட்சுமி அம்மா, யாரிடமும் பேசாமல் நோய்வாய்ப்பட்டு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டார். பின்னர் வீட்டிற்கு வந்தவுடன் அனைவரிடமும் சகஜமாக பேசிய அவர், இரவு தூக்கத்திலேயே உயிரிழந்தது போல காட்டப்பட்டது.

  இதனை தொடர்ந்து சுமார் 1 வாரத்திற்கும் மேல் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட்கள் ரசிகர்களின் மனதை உருக்கி கண்ணீர் விட வைத்தன. வீட்டை விட்டு துரத்தப்பட்ட கண்ணன் மனைவியுடன் வாடகை வீட்டில் வசித்து வருவது போலவும், வேலை நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கும் போது தாய் இறந்த செய்தி தெரியாமல் இயல்பாக ஊர் திரும்பு கண்ணன், இறந்த பின் இறுதி வரை தாய் முகத்தை பார்க்க முடியாமல் போவது போலவும், இறுதி சடங்கு காட்சிகள் உண்மை நிகழ்வுகளை பிரதிபலிப்பது போலவும் ஒளிபரப்பானது சின்னத்திரை ரசிகர்களை சில நாட்கள் சோகத்தில் ஆழ்த்தியது.

  இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வரும் எபிசோட்கள் இதற்கு நேர்மாறாக ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தி வருகிறது.லட்சுமி அம்மாவின் மறைவிற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் இயல்பு நிலைக்கு திரும்பிய கையோடு, இறப்பதற்கு முதல் நாள் லட்சுமி அம்மா சொன்னது போலவே தற்போது தனத்திற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதே ரசிகர்கள் மீண்டும் உற்சாகமாக இந்த சீரியலை பார்க்க காரணமாக உள்ளது.   
  Instagram இல் இந்த இடுகையைக் காண்க

   

  Tamil Serials இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@tamilserialexpress)


  விரைவில் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் தொடர்பான எபிசோட் கோலாகலமாக ஒளிபரப்பாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அதற்கான ஷூட்டிங் ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறது தயாரிப்பு நிர்வாகம். வழக்கமாக விஜய் டிவி சீரியல்களின் ஸ்பெஷல் எபிசோட்களில் அந்த சேனலின் முன்னணி பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்துவது போல காட்சிகள் ஒளிபரப்பாகும். தனத்தின் குழந்தை பெயர் சூட்டும் விழாவும் இதற்கு விதிவிலக்கல்ல. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடிகரும் பிக்பாஸ் பிரபலமுமான ரியோ இருப்பது போன்ற போட்டோ சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

  அம்மாவுடன் குழந்தையை சேர்க்கும் முயற்சி... கண்ணம்மாவுக்கு ஓடி வந்து உதவும் அஞ்சலி!

  நடிகர் ரியோவை தவிர வேறு சில விஜய் டிவி நட்சத்திரங்களும் இந்த வைபவத்தில் பங்கேற்பார்கள் என்று பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கிறார்கள்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Sreeja Sreeja
  First published: