வெள்ளித்திரை நடிகைகள் என்று வரும்போதுதான் குடும்பப் பாங்கான நடிகை, கவர்ச்சி நடிகை என்றெல்லாம் பிரிக்க முடியும். ஆனால் சின்னத்திரை நடிகைகளை பொறுத்தவரை பெரும்பாலானவர்கள் குடும்பப் பாங்கான நடிகைகள் தான். அதிலும் ஒரு சிலர் நம் பக்கத்து வீட்டுப் பெண் போல தோற்றம் கொண்ட பாத்திரங்களில் நடிப்பவர்கள். அவ்வளவு பாந்தமான கதாபாத்திரங்களில் நடிக்கும் சின்னத்திரை நடிகைகளை நாம் சாதாரணமான மாடர்ன் ட்ரஸ்ஸில் பார்த்தா கூட அவரா இவர் என்று வியந்து போவதுண்டு. இதற்கு உதாரணம் நடிகைகளின் சோஷியல் மீடியா கணக்குகளை பார்த்தாலே தெரியும். ஆனால் மிகவும் குடும்பப்பாங்கான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை அரபி குத்து பாடலுக்கு செம குத்தாட்டம் போட்டிருக்கிறார் அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
சீரியல்களைப் பொறுத்தவரை மிகவும் பாந்தமான நடிகை, அமைதியான முகம் மற்றும் தோற்றம் கொண்டவர், அதிர்ந்து கூட பேசாதவர் என்று அவருடைய தோற்றத்திற்கும் கதாபாத்திரத்துக்கும் 100% பொருத்தமானவர் சின்னத்திரை நடிகை சுஜிதா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்ற பாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே திரைப்படங்கள் மற்றும் சின்னத்திரை சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தது முதலே புகழ்பெற்ற நடிகை சுஜிதா தனம் ரோலின் மீண்டும் புகழின் உச்சியை அடைந்தார் என்றே கூறலாம். இந்த சீரியல் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இவரின் நடிப்பு மற்றும் கதாபாத்திரத்துக்காகவே, மற்ற மொழிகளிலும் அண்ணி ரோலில் இவரே நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமூக வலை தளங்களில் ஏதேனும் ஒரு விஷயம் ட்ரெண்டாகும் போது, அதை பொது மக்கள் முதல் நடிகர்கள் நடிகர் நடிகைகள் மற்றும் சோசியல் மீடியா இன்ஃப்ளூயஸர்கள் உள்ளிட்ட பலரும் அந்த வீடியோவுக்கு ரீல்ஸ் செய்து சமூக வலைத்தள கணக்குகளில் பகிர்வார்கள். அந்த வரிசையில் அரபி குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவு செய்யாத நடிகைகளே இல்லை என்று கூறலாம்.
பிளாட் ஃபார்முக்கு வந்த விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரகேசர் - காரணம் என்ன?
சமீபத்தில் கூட சோசியல் மீடியா உலகின் முடிசூடா இளவரசியாக வலம் வரும் ஷிவானி நாராயணன்
அரபிக்குத்து பாடலுக்கு, தனது நடனத்தை பதிவு செய்திருந்தார். அவர் தாமதமாக அந்த டான்ஸ் ரிலீஸ் செய்ததால் ரசிகர்கள் அவரிடம் செல்லமாக கொபித்தனர். அந்த டான்ஸ் வீடியோவும் வைரலானது.
தனுஷுடன் ஏற்பட்ட பிரிவு... செல்வராகவன் படத்தைப் பகிர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொன்ன விஷயம்!
அதே போல, அதிகமாக மாடர்ன் ட்ரஸ்ஸில் கூட பார்த்திராத நடிகை சுஜிதா சமீபத்தில் ட்ரெண்டாக இருக்கும் அரபிக் குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கும்
வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை சுஜிதா இப்படி டான்ஸ் ஆடுவாரா, இப்படி குத்தாட்டம் போடுவாரா என்று அந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார் சுஜிதா.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.