Home /News /entertainment /

குழந்தை நட்சத்திரம் டூ சூப்பர் ஹிட் இயக்குனர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணன் யார் தெரியுமா?

குழந்தை நட்சத்திரம் டூ சூப்பர் ஹிட் இயக்குனர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணன் யார் தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணன்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணன்

அண்ணன் - தங்கை இருவருமே குழந்தை பருவத்திலே தங்களது கலையுலக பயணத்தை தொடங்கி விட்டனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் மட்டும் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் இல்லை, அவரின் அண்ணனும் மிகப் பெரிய குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கலக்கியவர் தான். அவர் யார் தெரியுமா?

    சுப்ரமணி ராதா சுரேஷ் ஆனால் அவரை சூரிய கிரண் என்றால் தான் பலருக்கும் தெரியும். ரஜினிகாந்த், சிரஞ்சீவி, நாகார்ஜுனா போன்ற சூப்பர் ஸ்டார்களின் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். கிட்டத்தட்ட 200 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக கலக்கி இருக்கிறார். ஆனால் அவருக்கு இயக்குனர் ஆவதில் தான் விருப்பம் என்பதால் நடிப்பதில் இருந்து விலகி எழுத்து, இயக்கம் பக்கம் கவனத்தை செலுத்தினார். தெலுங்கில் இவர் இயக்கிய படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இவருக்கு மாஸ்டர் சுரேஷ் என்ற செல்ல பெயரும் உண்டு.

    ரஜினியுடன் சூரிய கிரண்


    சினிமா ஆசையால், சூரிய கிரண் தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு 2003 ஆம் ஆண்டு நாகார்ஜுனா அக்கினேனி தயாரித்த சத்யம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்பு அவர் இயக்கிய சில படங்கள் தோல்வியை சந்தித்தன. 2 வருடங்களுக்கு முன்பு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    VJ Mahalakshmi marriage :கணவர் பற்றி மகாலட்சுமி சொன்ன வார்த்தைகள்!

    இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனமாக நடிக்கும் சுஜிதா தனுஷின் அண்ணன் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். அதுமட்டுமில்லை இவர் நடிகை காவேரியின் முன்னாள் கணவரும் கூட. மலையாள நடிகையான  காவேரியை திருமணம் செய்துக் கொண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டனர்.

    தங்கை சுஜிதாவுடன் சூரிய கிரண்


    தனது தங்கையுடன் சூரிய கிரண் லவ் யூ ஜிந்தகி நிகழ்ச்சியில் கடைசியாக கலந்து கொண்டார். அண்ணன் - தங்கை இருவருமே குழந்தை பருவத்திலே தங்களது கலையுலக பயணத்தை தொடங்கி விட்டனர். கிட்டித்தட்ட 30  ஆண்டுகளுக்கு மேலாக தங்களது பங்களிப்பை தந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sreeja
    First published:

    Tags: Pandian Stores, TV Serial, Vijay tv

    அடுத்த செய்தி