Home /News /entertainment /

அப்பான்னு கூட பார்க்காம லெஃப்ட் ரைட் வாங்குன மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

அப்பான்னு கூட பார்க்காம லெஃப்ட் ரைட் வாங்குன மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா அப்பாவிடம் சண்டை போட்டு உண்மை என்ன என்பதையும் கண்டுபிடித்து எல்லோர் மனதிலும் நின்று விட்டார்.

    பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடை பணத்தை திருடியது கண்ணன் இல்லை என்பதை மீனா நிரூபித்துவிட்டார். ஜீவாவுக்கு சந்தோஷம் தாங்கல.

    விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இந்த வாரம் முழுவதும் அதிரடியான பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. கண்ணன் மீது மூர்த்திக்கு அளவுக்கு அதிகமான கோபம் இருந்த போதும் கண்ணன் சமீபத்தில் கடையை திறந்து லாபமான முறையில் வியாபாரம் செய்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்தார். ஆனால் அதற்குள் மீனாவின் அப்பா கடையில் பணம் திருடு போன விஷயம் மிகப் பெரிய அளவில் வெடித்தது. அத்தாச்சி கஸ்தூரி வந்து மொத்த உண்மையையும் போட்டு உடைக்க மூர்த்திக்கு கண்ணன், கதிர் இரண்டு பேர் மேலேயும் கோபம் தலைக்கு ஏறியது.

    ஆனால் மொத்த குடும்பமும் கண்ணன் திருடி இருக்க மாட்டான் என நம்பியது.ஆனால் அதை நிரூபிக்க எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை. கடைக்குட்டி அண்ணி மீனா நேரா அவரின் அப்பா கடைக்கு சென்று இதை டீல் செய்தார். ஜனார்த்தன் கடையில் உண்மையில் பணத்தை திருடியது யார் என்பதை கடையில் இருக்கும் சிசிடிவி கேமிரா மூலம் கண்டுப்பிடிக்கிறார். கடைசியில் அவரிடம் இருந்து ரூ. 15,0000 பணத்தை இது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் பணம் என்று கூறி எடுத்து வருகிறார்.



    மீனாவிடம் இருந்து இப்படியொரு ஆக்‌ஷனை யாரும் எதிர்பார்க்கவில்லை. அதுமட்டுமில்லை ஜனார்தனும் இதை எதிர்பார்க்கவில்லை. மீனா பேசுவதை பார்த்து ஷாக்கில் நிற்கிறார். ஆனால் ஜீவாவுக்கு மீனா செய்ததை பார்த்து வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி. கண்ணனுக்காக அப்பாவிடம் சண்டை போட்டு உண்மை என்ன என்பதையும் கண்டுபிடித்து எல்லோர் மனதிலும்  நின்று விட்டார். இதற்கு ஜீவா மீனாவுக்கு நன்றியும் கூறுகிறார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Vijay tv

    அடுத்த செய்தி