பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த வாரம் பரபரப்பான ட்விஸ்டுகள் காத்துக் கொண்டிருக்கின்றன.அதுக் குறித்த புரமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு வாரம் மகா சங்கமம் முடிந்த பின்பு, இப்போது தான் கதை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அதாவது, முல்லைக்கு குழந்தை பிறப்பதற்காக எடுக்கப்பட்ட ட்ரீட்மெண்டுக்காக மூர்த்தி வெளியில் கடன் வாங்கி இருந்தார். கிட்டத்தட்ட 5 லட்சம் சேர்த்து கதிர் - முல்லையிடம் கொடுத்தார். முதல் முயற்சி சக்கஸ் ஆகிவிடும் என்று நினைத்தனர். ஆனால் கடைசி நேரத்தில் அது வொர்க் ஆகவில்லை. இதனால் மொத்த குடும்பமும் ஷாக்கில் இருக்கின்றனர். இதற்கிடையில் மூர்த்திக்கு பணப்பிரச்சனையும் தொடங்கி விடுகிறது.
இதையும் படிங்க.. தொடங்குகிறது பிக் பாஸ் சீசன் 6.. ஆங்கர் யார் தெரியுமா?
கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்க தொடங்கி விட்டனர். இப்படி இருக்கையில், வரும் வாரத்தில் கதிரிடம் மீனாவின் அப்பா ஜனார்த்தன் சண்டைக்கு செல்கிறார். காரணம், முல்லையின் மருத்துவ செலவுக்கு வாங்கிய கடனை அடைக்க மீனா உதவி செய்கிறார் போல. இந்த விஷயம் அவரின் அப்பாவுக்கு தெரிந்து விடுகிறது. இப்படி இருக்கையில் வீட்டுக்கு வரும் மீனாவின் அப்பா கதிரை மோசமாக திட்டி விடுகிறார். மீனாவின் அப்பா சொன்ன வார்த்தைகள் கதிரை கலங்க வைக்கிறது. எதுவுமே பேச முடியாமல் நிற்கிறார்.
ஜனார்த்தன் பேசியதை, கஸ்தூரி அத்தாச்சி கேட்டு விடுகிறார். உடனே அவர் எல்லா விஷயத்தையும் வீட்டுக்கு வந்து இருக்கும் முல்லையின் அம்மா, அப்பாவிடம் சொல்லி விடுகிறார். கோபத்தில் முல்லையின் அம்மா வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கிறார். இதை நான் சும்மா விடமாட்டேன் என்று மீனாவின் அப்பாவிடம் சண்டைக்கு செல்கிறார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் சண்டையில் இரண்டாகிறது.
பேச்சிலர் பார்ட்டி வைத்து கொண்டாடிய சீரியல் நடிகை.. திரண்டு சென்ற பிரபலங்கள்!
மூர்த்தியும் தனமும் செய்வதறியாமல் திகைத்து நிற்கின்றனர். மீனாவின் அப்பாவால் மறுபடியும் வீட்டில் பிரச்சனை வருகிறது. அதுமட்டுமிலை இதுவரை கடனே வாங்காத மூர்த்தியின் குடும்பம் இன்று கடனாளியாக நிற்கிறது. இதுப்போன்ற பல அதிரடி ட்விஸ்டுகள் அடுத்த வாரம் உங்களுக்கு காத்துக் கொண்டிருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.